Thursday, January 5, 2023

பெண் குழந்தை ஒரு வரம்...

 ஒரு வயதான முதியவர் மரணமடைந்தார். அவர் வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே ஒருவர் வருகிறார் .மரணம் அடைந்தவர் இவர் என்னுடைய நண்பர் இவர் எனக்கு பத்து லட்சம் ரூபாய் தரவேண்டும் பணம் தந்தால்தான் உடலை எடுக்க விடுவேன் என்கிறார்.
விவாதங்கள் நடக்கிறது மூன்று மகன்களும் சொல்கிறார்கள் நாங்கள் பணம் தர மாட்டோம் எங்கள் தந்தை இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்கிறார்.
அங்கு இருந்தவர்கள் மகன்கள் கொடுக்காதபோது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல பதட்டம் அதிகரித்து கொண்டே போய்கிறது.
அவருக்கு ஒரே ஒரு மகள் திருமணம்
ஆக வில்லை. அவள் ஓடி வந்து கழுத்தில் கையில் இருந்த நகைகளை கழட்டி ஐயா இதை வைத்துக் கொள்ளுங்கள்.
மீதி பணத்தை நான் தருகிறேன் என்று சொன்னாள்.
அவர் வேண்டாம் தாயே நான் தான் உன் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும்.
உன் தந்தை தன்னுடைய மரணத்திற்கு பிறகு உண்மையில் யார் என்னை நேசிக்கிறார்களோ, அவர்களிடம் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அதனால் தான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன் மன்னித்து விடுங்கள். என்று சொல்லி கையிலிருந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
உண்மையில் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...