Tuesday, October 17, 2023

அவர்கள் தவறு செய்வதாக தலைமைப் பீடம் கருதியது.

 கிறிஸ்தவ மத போதகர்கள்

முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது,
அவர்களில் சிலர்,திலகம் அணிய
ஆரம்பித்தார்கள்.
இதன் காரணமாக
போப் ஆண்டவரின் வத்திகானில்
விவகாரம் ஏற்பட்டு, மத
போதகர்களை விளக்கம் கேட்டு
எழுதியிருந்தார்கள்.
சிலர் திலகம் அணிந்து கொண்டார்கள்.
சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.
சிலர் பூணூலும், காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல்
வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக
தலைமைப் பீடம் கருதியது.
ஆனால்,மதபோதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.
அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும்,
திலகம் அணிவதால் அவர்கள்
ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும்,
மரக்கட்டைச் செருப்பு அணிவதால்,
தியானம் வெகுவிரைவில்
கைகூடுவதாகவும்
தியானசக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.
மேலும், இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.
அவற்றைக் கிறிஸ்துவ மதபோதகர்கள் அறியாதிருப்பது
மடத்தனம்' என்றும்
குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்துக்களுக்கு நிச்சயமாக பல
விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.
இல்லாவிட்டால்,20,000
ஆண்டுகளாக சமயத்தேடுதல்
இருந்திருக்க முடியாது.
உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.
அவர்களுக்கு இருந்தது..
ஒரே ஒரு ஆசைதான்:
"இந்த வாழ்வுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் அருவமான
உண்மையை அறியவேண்டும்.
வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"
20,000 ஆண்டுகளாக இந்த ஒரு
தேடலுக்காக ஒரே மனதுடன்
தம் அறிவையெல்லாம்
பயன்படுத்தி வந்த அவர்களுக்கு
எதுவும் தெரியாது என்பது
வியப்பான கருத்து அல்லவா?
அவர்களுக்கு உண்மை
தெரியும் என்பதும், அதில்
அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும்
இயல்பான உண்மை.
ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில
நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
இந்த இந்துதேசத்தின் மீது
நூற்றுக்கணக்கான அந்நியப்
படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால்,எந்தப்
படையெடுப்பாளராலும்
முக்கியமான மையத்தை தாக்க
முடியவில்லை.
சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.
சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.
சிலர், அரண்மனைகளையும்
கோட்டை கொத்தளங்களையும்
கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின்
உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க
முடியவில்லை;
கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த
இஸ்லாமியப்படையெடுப்பால்
எதுவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...