Tuesday, October 17, 2023

எப்படி #இருந்த #கட்சி #இப்படி #ஆகிவிட்டதே?

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியின் பெயர் காமராஜர் மருத்துவமனை...

ஆனால் இ்ப்போது அங்கு
ஒரு இடத்தில்கூட காமராஜரின் பெயர் இல்லை மருத்துவமனை முழுக்க தேடிப்பார்த்து ஓய்ந்துவிட்டேன்....
மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிவிட்டது...
காங்கிரஸ் மாவட்டத்தலைவருக்கு
இதையெல்லாம் கவனிக்க நேரம் கிடையாது...
திண்டுக்கல் மாநகராட்சி பேரூந்துநிலைத்தின் பெயர் பெருந்தலைவர்
காமராஜ் மத்திய பேரூந்து நிலையம்...ஒரே ஒரு இடத்தில் ஓரமாக பெயர்பலகை இருக்கிறது
உள்ளே போகும் வழியிலும் வெளியே வரும் வழியிலும் இரண்டு வளைவுகள் காமராஜ் பெயரில் அமைக்கவேண்டும் என்று கரடியாய் கத்தியும் கழகத்தினரின் காதுகளில்
விழுந்தபாடில்லை...
கவுரமாக விரல் சூப்பிக்கொண்டு
கச்சிதமாக தலையாட்டிக்கொண்டு
மோகவாழ்க்கை வாழ்வது
வருங்கால சந்ததியின் சாபம் பெறவா?
காமராஜருக்கும் காங்கிரஸுக்கும் செய்யும்
துரோகம் என்பது...
பைபிளில் சொல்லும்
சாவான பாவத்தை விட
கொடிய பாவம்.
தமிழ்நாட்டில் அரசியல்
செய்து காங்கிரஸால்
பதவிகள் பெற்று காலகாலத்துக்கும் கண்ணுக்கெட்டிய பரம்பரைவரை....
தங்கத்தட்டில் அன்னம் உண்ண அடித்து சேர்த்து குவித்து வைத்திருக்கும் கொள்ளை பணம்....
மண்ணாய்ப் போகும் என்ற இறைச்சம்
இல்லாமல் போனதா நம் தலைவர்களுக்கு?

All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...