அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மத்திய பிரதேஷ் மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை கழட்டிவிட்ட கான்கிராஸ். இ.ந்.தி கூட்டணியில் உள்ள டில்லி கெஜ்ரிவாலின் ஆப் கட்சியும் கான்கிராசை எதிர்த்து தனித்து போட்டியாம்..
கடும் கோபத்தில் ஆகிலேஷ் யாதவ் உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் கான்கிராசை கழட்டி விடுவோம் என சூளுரை.
தேசிய அளவில் ஒன்றுக்கூடி பாஜகவை எதிர்க்க போகிறோம் பேர்வழிகள் என்று அழுகுரலிட்டு பாட் னாவிலும், மும்பையிலும், பெங்களூரிலும் ஒன்று கூடிய இ.ந்.தி கூட்டணி சந்தர்ப்பவாத குடும்ப ஊழல் கட்சிகள் எல்லாம் சில மாநில சட்டமன்ற தேர்தலிலேயே ஒன்று கூடி பாஜகவை எதிர்த்து நிற்க முடியவில்லை, இந்த முகரைகள் எல்லாம் ஒன்று கூடி தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து நிற்கப் போகிறார்களாம். இவர்கள் எல்லோரும் ஒன்று கூடினாலும், கூடாவிட்டாலும் இவர்களால் பாஜகவை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.. அந்த அளவுக்கு பெருவாரியான பாரத மக்கள் அவர்களின் கட்சி பாஜகவுக்கு தான் பக்கபலமாக நிற்கிறார்கள்..!
இப்போது பாஜக கடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரையே அறிவிக்காமல் தோற்ற தவறை மீண்டும் மற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் செய்துவிடக் கூடாது..
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அல்லது ஜோதிராத்தித்ய சிந்தியா இவர்களில் யாராவது ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்..
அதேபோல..,
ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தர ராஜே அல்லது ரவீந்திர சிங் ரத்தோர் இவர்களில் யாராவது ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்..
அதேபோல..,
தெலங்கானா மாநிலத்தில் பண்டி சஞ்சய் குமார் அவர்களையும் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் ரமன்சிங் அவர்களையும் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்..
அதேபோல..,
மிசோராம் மாநிலத்தில் தற்போதைய பாஜக கூட்டணிக் கட்சி முதலமைச்சர், மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரந்தங்கா அவர்களையே முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்..
இனிமேல் இ.ந்.தி கூட்டணி ஊழல் குடும்ப கட்சிகள் எதுவும் எந்த மாநிலத்திலும் ஆட்சிக்கு வர பாஜக இம்மியளவுக் கூட வாய்ப்பையே தரக்கூடாது.. இ.ந்.தி கூட்டணி கட்சிகள் எல்லாமே அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக அழித்தொழிக்கப் படவேண்டிய தேசவிரோத, மக்கள் விரோத நாசகர கட்சிகள், அந்த ஊழல் குடும்ப கட்சிகளை அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக ஒழித்துக் கட்டும் வல்லமை பாஜகவுக்கு மட்டும் தான் இருக்கிறது,..!
பல்லிளிக்கிறது இண்டி புள்ளி
ராஜாக்களின் கூட்டணி...
No comments:
Post a Comment