அந்த கூட்டத்திற்கான அழைப்பிதழில் அவரது பெயருக்கு கீழே அமைச்சர் என அச்சிடப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பாதாகைகளில் அவரை அமைச்சர் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
அந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் பயன்படுத்த அரசால் வழங்கப்பட்ட காரில்தான் சென்றார்.
அந்த கூட்டத்திற்கு அவர் செல்வதற்கு பயன்படுத்திய அரசு காரின் ஓட்டுநர் ஒரு அரசு அலுவலரே.
அந்த கூட்டத்தில் அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
அந்த கூட்டத்திற்கு அரசு வாகனத்தில் அவர் செல்லும் போது, அவரது காருக்கு முன்பாக அமைச்சர்களுக்கு வழங்கப்படும் VIP ESCORD வாகனம் சென்றது.
அந்த கூட்டத்தில் அவரது பெயரை விளித்தவர்கள் அனைவருமே அமைச்சர் என்றே விளித்தனர்.
அந்த கூட்டத்தில் அவரை பேச அழைத்த போது, அடுத்து அமைச்சர் பேசுவார் என்றே கூறி அழைத்தனர்.
அந்த கூட்டத்தில் அவர் பேசும் போது அமைச்சர் என்ற முறையிலே பேசுகிறேன் என்றார்...
ஆட்சி க்கு வந்ததே சநாதனத்தை ஒழிக்க தான்...
அதனால் ஆட்சியே போனாலும் கவலைப் பட மாட்டோம். சநாதனத்தை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றார்...
அந்த கூட்டத்தில், எந்த இடத்திலும் நான் தனிப்பட்ட முறையில் பேசுகிறேன் என அவர் கூறவில்லை.
இதையெல்லாம் நீதிமன்றத்தில் மறைத்து... நீதிமன்றத்தை ஏமாற்றி... மறைத்து கோர்ட்டுல "விளையாட்டா" பொய் பதில் சொல்லலாமா??
No comments:
Post a Comment