அதிகாலையில் தரப்படும் வணக்கங்கள் மரியாதைக்குரியவை,
ஒருவர் முகம் பார்த்து ஒருவர் நலம் விசாரிக்கக்கூடியவை,
நேற்றை கடந்து விட்டோம்,
இன்றை கடந்து செல்வோம் என்ற நம்பிக்கையை கொண்டவை,
புதுப் புது அர்த்தங்களை நம் இதயத்தில் விதைக்கக் கூடியவை,
மலர்ந்த இதயத்தின் வசந்தங்களை மற்றுமொரு உள்ளத்திற்கு பரிமாற்றம் செய்யக் கூடியவை,
நான் உன்னோடு அன்பாக இருக்கிறேன்,
நீயும் என்னோடு அன்பாகப் பழகு
என்ற அர்த்தத்தை பிரதிபலிக்கக் கூடியவை,
நம் விலாசத்தை முக மலர்ச்சியால் பிறருக்கும் ஆசீர்வாதம் செய்யக் கூடியவை,
வணக்கம் சொல்வது என்பது வாழ்வியலின் வழிபாட்டுக்கு ஒத்தவை,
அக இருளை அப்புறப்படுத்தி புதிய விடியலை புன்னகையால் தரிசிக்க கூடியவை,
அதோ பாருங்கள் அன்பாய், அழகழகாய் செடிகளும் மரங்களும் பூத்து தன் வணக்கத்தை தவறாமல் செலுத்துகிறது தன்னைத் தாங்கிய இந்தப் பிரபஞ்சத்திற்கு...!
*அன்புடன் இனிய காலை வணக்கம்.*
No comments:
Post a Comment