Tuesday, October 19, 2021

Even English news papers have turned into ஜால்ராக்கள் .

 இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் RM வீரப்பன் முன்னாள் அதிமுக தலைவரின் முழு பக்க பேட்டியை பார்த்தேன் ! எங்கோ மூலையில் அமர்ந்து நாளை எண்ணிக்கொண்டிருக்கும் வயது முதிர்ந்த கிழவரை தேடிப்பிடித்து பேட்டி கண்டிருக்கிறார்கள் ! எம் ஜி ஆர் மறைவோடு அதிமுக அத்யாயம் முடிந்து விட்டதாம் ! ஸ்டாலின் மூலம் மீண்டும் அண்ணாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறதாம் ! அப்படியானால் ஸ்டாலின் தந்தை கருணாநிதி அண்ணா ஆட்சி செய்யவில்லை என்கிறாரா ? இன்று இளம் புயலாக கிளம்பி இருக்கும் அண்ணாமலையின் நேற்றைய பேட்டியில் முன்கள ஊடகங்களை புரட்டி எடுத்ததை பற்றி ஒன்றும் காணோம் ! இந்த ஒன்றுக்கும் ஆகாத கிழவரை பிடித்து கொண்டார்கள் ! அந்த மனிதர் அதிமுக வையும் வாழ விடவில்லை ! 1987 ல் கட்சியை உடைத்து ஒன்றும் அறியாத அப்பாவியான எம் ஜி ஆர் மனைவியான ஜானகியை முதல்வர் பதவியில் 45 நாட்கள் அமர்த்தி ஆளாளுக்கு நீட்டுகிற இடத்திலெல்லாம் கை எழுத்து வாங்கி சுருட்டோ சுருட்டு என்று சுருட்டினார்கள் ! சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நாளில் இந்த மனிதர் ஜானகியை கருணாநிதியிடமே மண்டி இட வைத்தார் ! யாரை எதிர்த்து அவர் கணவர் கட்சி தொடங்கினாரோ அவரிடமே சரணடைய வைத்தார் ! 11 வருட பசியோடு இருக்கும் புலி இரை கிடைத்தால் விடுமா ? ஆட்சியை கவிழ்த்து விட்டது ! அதோடு விட்டாரா ஜானகியை தேர்தலில் அதிமுக( ஜா ) அணி என்று நிறுத்தி பெரும் தோல்வியை வாங்கி கொடுத்தார் ! நல்ல வேளையாக அவர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலை விட்டு விலகி விட்டார் ! இந்த மனிதர் ஜெயலலிதா தனக்கு செய்த அனைத்து தீமைகளையும் மறந்து மன்னித்து அவரை கட்சியில் மீண்டும் அனுமதித்து அமைச்சர் பதவியும் கொடுத்தார் ! அவர் மீண்டும் தன் சுய ரூபத்தை காட்டியதால் வெளியே துரத்தப்பட்டார் ! எம் ஜி ஆர் காவது உண்மையாய் இருந்தாரா என்று தெரியவில்லை.

முதலில் எல்லாம் நல்ல முதல் தர செய்திகள் வந்து கொண்டி௫க்கும். தற்போது, ஒன்லி மொக்கை செய்திகள், மூன்றாம் தர மீடியா, அதுவும் நாலாந் தர ஆட்களை பேட்டி கண்டு !! நாம், இந்த உளறல்களை பார்க்கவில்லை என்றாலே, அன்றைய பொழுது நன்றாக போகும் !! 😃 🤣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...