அப்புறம்,
இப்பிடியே பேசாம இருந்தா எப்பிடி
நாழி ஆறதில்லே,
புள்ளையான்டானுக்கு என்ன உத்தியோகம்?
நாலு பேர நறுக்கு ன்னு கேள்வி கேக்குற உத்தியோகம்,
கேள்வி கேக்கற எடத்துக்கு ஏத்தாப்ளயும்
ஆளுக்கேத்தாப்ளயும் வரும்படி 'கவர்' ஆவும்.
அதுசரி புரோக்ககரே
என்ன உத்தியோகம் ன்னு சொல்லவே இல்லையே?
முன்களப் பணியாளர்.
அப்பிடி ன்னா?
டி வி யிலே ரிப்போர்ட்டர் ரா இருக்கார்.
சொல்றேன் ன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ,
எம் பொண்ணு கால்வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லே,
மூட்டை தூக்கி கூலி வேலை செய்யற மாப்பிள்ளையா இருந்தாலும் பரவாயில்லே,
இல்லே
டாஸ்மாக் க்கு உத்தியோகம்,
அது மாதிரி கௌரவமான வேலை பாக்குற மாப்பிள்ளயா பாருங்க.
அது வந்து....,
எதுவும் வரவேணாம்
இப்ப நீங்க கெளம்பலாம்.
கோதாவரி,
அந்த கேசரி பஜ்ஜி எல்லாத்தையும்
ஃப்ரிட்ஜில எடுத்து வை
நாளு நாளைக்கு நாமலே சாப்ட்றலாம்!
No comments:
Post a Comment