யாரும் அதிகம் எதிர்பார்க்காதவரை..
அதிகம் எவரும் யூகிக்காத ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்துள்ளது பாஜக..
எல்லோரும் எதிர்பார்த்து சொன்ன ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, கேப்டன் அம்ரிந்தர் சிங் (நானும் இப்படி பதிவுகள் போட்டது தான்)
எவரையும் அறிவிக்காமல், தற்போதைய மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் ( ஹிந்தியில் தன்கட் என உச்சரிப்பார்கள்) அவர்களை துணை ஜனாதிபதி போட்டியில் இறக்கி உள்ளது. அவர் தான் நமது அடுத்த துணை ஜனாதிபதி ஆகிறார்..
இந்த தேர்வில் எனக்கு தெரியும் மூன்று முக்கிய காரணங்கள் இங்கு பகிர்கிறேன்.. இதை தாண்டி பல விசயம் இருக்கலாம். அது ஆளும் பாஜகவுக்கு தான் தெரியும்..
முதல் காரணம்: மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் தன்கருக்கு அங்கு நடக்கும் வங்கதேச எல்லைதாண்டி நடக்கும் பல விசயங்கள், மம்தா பானர்ஜி அரசின் எல்லை தாண்டிய பாசம், மே.வங்க ஹிந்து மக்கள் காணும் இன்னல்கள், மதவாத வன்முறையுடன் கை கோர்த்த திருணாமுல் காங்கிரஸ் செய்து வரும் அனைத்து விசயமும் அறிந்தவர்..
களநிலவரம் அனைத்தையும் அறிந்த அவர் தில்லியில் உயர்நிலையில் அதிகாரத்தில் இருப்பது முக்கிய விசயமாக பார்க்க முடியும்..
அடுத்த காரணம்: விவசாய போராட்டத்தினால் ஜாட் இன மக்கள் அரசின் மீது கசப்புணர்வு கொண்டு இருப்பதாக ஊடகங்கள் சொல்லி வந்தன.. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாட் காரரான ஜகதீப் தன்கர் நியமனம் அதற்கு ஒரு பதிலாக இருக்க வாய்ப்புள்ளது
மூன்றாவது காரணம்: தன்கர் அவர்கள் 73 வயதாகும் அனுபவம் வாய்ந்த வக்கீல் ஆவார்.. ராஜ்யசபா நடத்த தலைமை ஏற்க நியம விதிகள் சட்டதிட்டங்கள் யாவையும் எளிதில் கையாளும் சட்ட அறிவு கொண்டவர் என இவர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்..
இது எனக்கு தெரிந்த விவரங்கள்..
பகிர்கிறேன்..
No comments:
Post a Comment