Sunday, July 17, 2022

திராவிடம் என்பது இனமா?

 வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி திராவிடர் என்ற வார்த்தையை கையாண்டது ஆங்கிலேயர்கள் தான் என்று பேசினார். உடனே திராவிட செம்மல்கள் ஆங்கிலேயர் வந்துதான் திராவிடர்கள் என்று பிரிவினை செய்தனர் எனச் சொல்வது வரலாறு தெரியாமல் பேசுவதாகும் என்று பொங்கினர்.

திராவிடர் என்ற வார்த்தையை கால்டுவெல் குறிப்பிடும் முன் திராவிடம் என்ற சமஸ்கிருத வார்த்தை தென்னிந்திய நிலப்பரப்பை குறிப்பதாக இருந்தது.
ஆதிசங்கரர் தன்னையும் தனது சௌந்தர்ய லஹரி யில் ஞான சம்பந்தரையும் திராவிட சிசு என்று குறிப்பிட்டார். அதாவது புரதக் கண்டத்தின் தெற்கில் உள்ள நிலப்பகுதி யில் இருந்து வந்த சிறுவன் என்பது இதன் அர்த்தம்.
கல்ஹணர் என்ற வரலாற்று ஆசிரியர் ராஜ தரங்கிணி என்ற நூலில் விந்திய மலைக்கு வடக்கே வாழ்ந்த பிராமணர்கள் பஞ்ச கவுடர்கள் மற்றும் விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்த பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார்.
திராவிடம் என்ற சொல்லே பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களில் இல்லை. வரலாற்று ஆய்வின்படி திராவிடம் என்றொரு இனம் இருந்ததில்லை என்பதும் அந்த சொல் தென் மாநிலங்களின் நிலப்பகுதியை மட்டுமே குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் திராவிடம் என்ற என்ற சொல்லும் நிலப்பகுதியையே குறிக்கிறது. அப்போது திராவிடம் என்பது எப்படி ஒரு இனத்தை குறிப்பதாகும்.
பிரிட்டிஷாரிடமிருந்து நாட்டின் விடுதலையை விரும்பாத தமிழரல்லாத நீதிக்கட்சி தலைவர்கள் தங்கள் அரசியல் பிழைப்புக்காக திராவிடம் என்றொரு போர்வையை சௌகரியமாக பயன்படுத்தி உள்ளனர். அர்த்தமற்ற அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது.
மொத்தத்தில் மொழி இனம் மரபு நாடு உணர்வு என எந்தவொரு அடிப்படையிலும் இன்று நம்மிடையே பொருந்தாத திராவிடம் என்ற சமஸ்கிருத சொல்லும் மாடல் என்ற ஆங்கில கலந்த ஒரு வார்த்தையும் தமிழர்கள் தொடர்ந்து நம்பும் வரை இது புரியாத புரட்டுக்களாக தொடரும் என்பது சந்தேகமே இல்லை.
திராவிட இனம் என்ற விஷத்தை முறிக்கக் கூடிய மருந்து தமிழர்களின் விழிப்புணர்வு மட்டுமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...