Sunday, July 17, 2022

ஐகோர்ட் உத்தரவுசரியான சவுக்கடியே!

 அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, நெல்லை மருத்துவக் கல்லுாரியில், நரம்பியல் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்தவர், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீஜித் வி.ரவி.இவர் தமிழகத்தில் பணியாற்ற மறுத்ததால், 'அரசுக்கு,50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேரும் போதே, தமிழகத்தில், ௧௦ ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; தவறும்பட்சத்தில், ௨ கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அந்த நிபந்தனையை இரண்டு ஆண்டு கட்டாய பணி, ௫௦ லட்சம் ரூபாய் இழப்பீடு என தமிழக அரசு குறைத்தும், அதை ஏற்க மறுத்து நீதிமன்றம் சென்றதால், தற்போது, ௫௦ லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற்று, மருத்துவ படிப்பை அல்லது முதுநிலை மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், மாநில அரசு பல லட்சம் ரூபாயை செலவிடுகிறது. அதனால் தான், குறிப்பிட்ட ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனாலும், அதை மீற பலர் முற்படுகின்றனர். படிப்பை முடித்தவுடன் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று, பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஒரு சவுக்கடியே.அனைத்து மாநிலங்களிலும், இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டாய பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கடந்த, 2012ல், கர்நாடக அரசு ஒரு சட்டம் இயற்றியது... அதன்படி, ஒருவர் மருத்துவ படிப்பு முடித்தவுடன், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகே, டாக்டர் பட்டமே வழங்கப்படும். அதுபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்றலாம்.

நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை இல்லாத மருத்துவ மாணவர்களுக்காக செலவழித்த பணத்தை, அரசு திரும்ப பெறுவதில் தவறு எதுவும் இல்லை. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு, குறிப்பிட்ட ஆண்டுகள் இங்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடிக்க நினைப்பவர்களுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ஒரு நல்ல பாடமே. ௫௦ லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது. இன்னும் அதிக பணம் செலுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...