Sunday, July 17, 2022

'குடி'மகன்களே உஷார்!

  வேலுாரில் முதல்வர் ஸ்டாலின் வருகையை யொட்டி, அவசர கதியில் நடந்த சாலை பணியின் போது, மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து சிமென்ட் சாலை அமைத்தது; ஜீப் வாகனத்தை அகற்றாமல் தார்ச் சாலை போட்டது போன்றவை, பெரிய அளவில் பேசு பொருளாகின.


இந்த விவகாரம் தொடர்பாக, வேலுார் மாநகராட்சி உதவி பொறியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டு உள்ளார்.அதேபோல, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரில் கழிவு நீர் கால்வாய் அமைத்த போது, அங்குள்ள மின் கம்பத்தை நகர்த்தி அமைக்காமல், அதைச் சுற்றி பள்ளம் தோண்டி, கான்கிரீட் கால்வாய் அமைத்துள்ளனர்.


இது போன்ற செயல்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தையே காட்டுகின்றன. ஒருவேளை இதுவும் திராவிட மாடல் ஆட்சியாக இருக்கலாம்... இந்த நேரத்தில், அதிக விழிப்புடன் இருக்க வேண்டியோர் 'குடி' மகன்கள் தான். போதை தலைக்கேறி ஆங்காங்கே சாலையோரத்தில் மட்டையாகிக் கிடக்கும் அவர்கள் மீதே சாலை போட்டு விடுவர், மெத்தப் படித்த நம் அதிகாரிகள்.


எனவே, அரசின் வருவாயை பெருக்கும் 'குடி'மகன்களே உஷாராக இருங்க... சாலை நடுவே குழிகளை அமைக்கும் குடிநீர் வாரியமும் சரி, சாலையோரம் கழிவு நீர் கால்வாய்களை அமைக்கும் நகராட்சி நிர்வாகமும் சரி, பாதசாரிகளை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதாக தெரியவில்லை.


சாலையோர நடைபாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே, சாலைகளில் பயணிப்போர், அதிக விழிப்புணர்வுடன் பயணித்து, தங்கள் உயிரை தற்காத்துக் கொள்ள வேண்டியது அவரவர் கடமையாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...