Friday, July 1, 2022

நியமங்கள்!

 பிதாமகர் பீஷ்மர் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்தார் பிண்டங்களை உருட்டி வைத்து பிரார்த்தனை செய்தார் பொதுவாக 3 பிண்டங்கள் வைப்பார்கள் அது நம் தாத்தாவின் தந்தை நம் தாத்தா மற்றும் நம் தந்தை என்பதை குறிக்கும்.

திதி செய்யும் பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது பிண்டத்திற்கு சற்று அருகில் ஒரு கை பூமியைப் பிளந்து எழுந்தது வியப்போடு நோக்கிய பீஷ்மர் அடுத்த நொடி அது தன் தந்தையின் கை என்பதை கண்டு கொண்டார் அதே ரேகைகள் அதே விரல் அமைப்பு என்பன அவருடைய தந்தையின் கை என்பதை அவருக்கு நன்றாகவே காட்டியது.
பிண்டத்தை
ஏந்துவதற்காக அந்த கை காத்திருந்தது.திதி செய்து வைக்க வந்திருந்த அவருடைய குரு இனி என்ன உன் தந்தையின் கையே தோன்றியிருக்கிறது அதில் பிண்டத்தை வைப்பாயாக என்றார்.
ஒரு கணம் யோசித்த பீஷ்மர் மறுத்தார் வைப்பது தவறு என்று முடிவு செய்தார் அப்பொழுது பிரத்யக்ஷமாக அவருடைய தந்தை சந்தனு தோன்றினார் முழு உருவோடு தோன்றிய அவர் தந்தையை வணங்கினார் பீஷ்மர்.
இப்பொழுது சந்தனு பேச ஆரம்பித்தார் என் கைகளைப் பார்த்த மாத்திரத்தில் பிண்டத்தை நேரடியாக என் கைகளில் எங்கே தந்து விடப் போகிறாயோ எங்கு உணர்ச்சிவசப்பட போகிறாயோ என்று நினைத்தேன் ஆனால் நீ அதைச் செய்யவில்லை
பிண்டங்களை நேரடியாக தருவது தவறு அது பித்ரு தேவதைகள் மூலமாகத்தான் எங்களுக்கு வந்து சேரவேண்டும் என்ற திதியின் சரியான நியமத்தை நீ புரிந்து இருக்கிறாய் என்றார் மேலும் நீ வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடும் நீயே விரும்பும் பொழுது மட்டும் தான் உனக்கு இறப்பும் வரும் என்கின்ற வரங்களைத் தந்து மறைந்தார்.
ஆகவே நாம் எப்பொழுது திதி கொடுக்கும் பொழுதும் அதற்கான நியமங்கள் என்று இருப்பதை பின்பற்ற வேண்டும் ஒரு தேவதா காரியமானாலும் கூட அதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் இறைவன் நம்மை கோபி பதில்லை.
ஆனால் பித்ரு காரியங்கள் செய்யும் பொழுது நம்முடைய முன்னோர்கள் அதை பெற்றுக் கொள்ள ஒரு போதும் வருவதில்லை அதற்கு பதிலாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட பித்ரு தேவதைகள் நாம் செய்யும் இந்த பிண்டங்கள் தான பொருள்களை பெற்றுக்கொண்டு அதன் பிறகு அதை நம்முடைய பித்ருக்களுக்கு(முன்னோர்களுக்கு) சேர்த்து அவர்கள் மூலமாக நமக்கு புண்ணிய பலன்களை தருகிறார்கள்.
என்பதை புரிந்து கொள்வதற்கான நிகழ்வு இது
அதனால் நான் இந்த வருடம் திதி கொடுக்க வில்லை அதற்கு பதிலாக வரும் வழியில் ஒரு வயோதிக பெரியவருக்கு உணவு அளித்து விட்டேன் என்று சொன்னால் அதுவும் இதுவும் சமமாகாது
வயோதிக பெரியவருக்கு உணவளித்தால் தவறில்லை அது திதி கொடுக்கும் நாளில் கூட செய்யலாம் அதற்கு புண்ணியம் உண்டு ஆனால் திதி கொடுக்க வேண்டும் என்று இருக்கிற அந்த நியமத்தை நாம் விடக்கூடாது என்பதுதான் இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...