Monday, July 4, 2022

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி: ஆளும் தி.மு.க.,வில் அதிர்வலையை ஏற்படுத்திய அமித் ஷா.

 பா.ஜ., தேசிய செயற்குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சவாலான பேச்சும், 'மஹாராஷ்டிரா பாணி ஆட்சி மாற்றம், தமிழகத்திலும் நடக்கலாம்' என, அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்கள் எழுப்புகிற விமர்சனமும், தி.மு.க., வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி: ஆளும் தி.மு.க.,வில் அதிர்வலையை ஏற்படுத்திய அமித் ஷா


அதிர்சி
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டத்தில், அமித் ஷா பேசுகையில், 'குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைக்கப்படும்' என கூறியுள்ளார். அவரது சவாலான பேச்சு, தமிழக பா.ஜ.,வினருக்கு உற்சாகத்தையும், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதவாது:தமிழகத்திலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. கடந்த ஓராண்டு கால தி.மு.க., ஆட்சியில், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டு கிடக்கிறது. தமிழக பா.ஜ., தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.


அடிமை
மஹாராஷ்டிராவை போல, தமிழகத்திலும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையோர், மாவட்ட அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளாக உள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், 'எம்.எல்.ஏ.,க்கள் எனக்கு அடிமைகள்' என வெளிப்படையாகவே பேசினார்.

வட மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் குழுக் குழுவாக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படுகின்றனர். எம்.எல். ஏ.,க்களின் தொகுதி பணிகளுக்கான, 'கான்ட்ராக்ட்' விவகாரத்தில் சிலர் அதிருப்தியாக உள்ளனர்.


ஆளுங்கட்சி
மேலும் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் யார் யார் என்ற பட்டியலை, பா.ஜ., மேலிடம் எடுத்து வருகிறது. ஏற்கனவே அகாலிதளம், சிவசேனா போன்ற கட்சிகளிடம் நடத்திய, 'ஆப்பரேஷனில்' வெற்றி பெற்று விட்டோம். அடுத்தகட்டமாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தி.மு.க., ஆகிய கட்சிகளை, 'டார்கெட்' ஆக வைத்திருக்கிறோம்.

'தகுதியற்ற வாரிசுகளை முன்னிறுத்தியதால் சரிந்த கட்சிகள், சரியப் போகும் கட்சிகள்... நேற்று அகாலி தளம்; இன்று சிவசேனா; நாளை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி; நாளை மறுநாள் தி.மு.க.,' என, 'டுவிட்டர்' பக்கத்தில் தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம் பதிவிட்டு உள்ளார். அவரை தொடர்ந்து, முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, 'மஹாராஷ்டிராவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம்' என கூறியுள்ளார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், 'எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுக்கிற வேலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி கச்சிதமாக செய்து முடிக்கும் வரை துாங்க மாட்டார்' என்றார். இப்படி பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் விமர்சித்து வருவது, ஆளுங்கட்சி வட்டாரத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் மாநில கட்சிகளுக்கு, பா.ஜ., நெருக்கடி கொடுக்க தயாராகி விட்டது என்பதை, பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அமித் ஷாவின் பேச்சு வெளிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


கனவு பலிக்காது!

'தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைக்கப்படும் என்ற, அமித் ஷா பேச்சு பலிக்காது' என தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., செய்தி தொடர்பு செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், ''அமித் ஷா கனவு பலிக்காது,'' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...