தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 'தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமெரிக்கா செல்ல அனுமதி வேண்டும். முதலீடுகளை ஈர்க்க இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது' என, முதல்வர் குறிப்பிட்டுள்ளாராம்.
இதற்கு பிரதமர் மோடி உடனே அனுமதி அளித்துவிட்டாராம்.தங்கம் தென்னரசு ஜூலை இறுதியில் அமெரிக்கா செல்வார் என சொல்லப்படுகிறது.அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனை அனுப்பாமல், தென்னரசுவை ஏன் ஸ்டாலின் அனுப்புகிறார் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
இதற்கிடையே ஸ்டாலினும் வெளிநாடு செல்ல பிரதமரிடம் அனுமதி கேட்டுள்ளார். அவருடைய கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
No comments:
Post a Comment