" *நாம் புடைக்கும் முறமா? அல்லது சலிக்கும் சல்லடையா? .....!!! எப்படி இருக்க வேண்டும் - என்பதை விளக்கும் எளிய கதை*
--------------------------------------------------------
" இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கின்றனர்.
ஒரு வகையினர் புடைக்கும் முறத்தையும், மற்றவர் சலிக்கும் சல்லடையையும் போன்றவர்கள் ஆவர்.
முறம் உபயோகமற்ற உம்மியைச் சிதறவிட்டு, உபயோகமுள்ள அரிசியை நிறுத்திக்கொள்ளும்.
அதுபோலவே பெரியோர் கொள்ளத்தகாதவையான பெண், பொன் முதலியவற்றைத் தள்ளி, ஏற்ற ஒரே பொருளான ஸ்ரீமந் நாராயணனைத் தம் மனதில் நிறுத்தித் தியானம் செய்வர்.
ஆனால், சல்லடையோ பயனுள்ள பொருட்களைக் கீழே விட்டு, உபயோகமற்றதை நிறுத்திக் கொள்வது போல், சிறியோர் பொருட்களைக் கீழே விட்டு, ஸ்ரீமந் நாராயணனை மறந்து விட்டு, பொன்னையும் பெண்ணையுமே முக்கியமாகக் கொள்வர் என மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்
----------------------------------------------------------
**சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *
No comments:
Post a Comment