1. முதலில் ஒருவிஷயம் !
இந்து சநாதன தர்மத்தில் ஒரே ஒரு கடவுள் கூட பிராமணர் கிடையாது!
2. அனைத்து கடவுளர்களும் பிற்படுத்தப்பட்டதாக நீங்கள் கூறும் இனத்தை, அல்லது தலித் மற்றும் மலைவாழ் ஜாதி சார்ந்தவர்கள்!
3.உண்மையில் சநாதன தர்மத்தில் கடவுள் என்ற ஒரு விஷயத்தை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் அல்ல!
4. மானிடம் தோன்றிய காலந்தொட்டு ஒரே ஒரு பிராமண அரசன் கூட பாரதத்தில் கிடையாது.
அரசாள்வதை தவிர்த்த அந்தணர்கள் ஆசிரியர், குருமார்கள், அரசனுக்கு ஆலோசனை கூறும் மந்திரிகள் என இருந்துள்ளனரே தவிர ஒருபோதும் அரசாண்டதில்லை.
6. பிராமணர்களின் தொழில் கோவிலில் பூஜை செய்பவர்களாகவும் யாகங்களை நடத்துபவர்களாகவும் மட்டுமே இருந்திருக்கிறது. அவர்களின் வாழ்க்கை
பிராமணரல்லாத ஜமீன்தாரர்களிடமோ அரசர்களிடமோ அவர்கள் தரும் தானத்தை கொண்டு பிழைப்பதாகவே இருந்துள்ளது.!
7. மற்றொரு அந்தணர் பிரிவில் வேதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியப்பணி அதுவும் சம்பளமில்லாத பணியாகவே இருந்துள்ளது.
8. அதிலும் வேத இலக்கியங்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதோராலேயே எழுதப்பட்டுள்ளது. சக்திவாய்ந்ததாக கருதப்படும் தர்ம சாஸ்திரம், தற்காலத்தில் பிராமணர்களை இழிவு படுத்த அதிகம் பயன் படுத்தப் படும் மனுஸ்மிருதியை எழுதிய மனு என்பவர் ஒரு பிராமணரல்லாதவர்! பிராமணர் என்பது ஒரு தொழில்(வர்ணம்) ஜாதியே அல்ல!
9. சமஸ்கிருதத்தை படிப்பதும் எழுதுவதும் பிராமணர்களின் ஆதிக்க வாழ்வு என்றால் பிராமணரல்லாத வால்மீகி ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியதும் நான்கு வேதங்களை தொகுத்த, மகாபாரத காவியத்தை மீனவப்பெண்ணுக்கு பிறந்த வேத வியாசர் எழுதியதும் எப்படி?
10. சமஸ்கிருதம் பிராமணரல்லாதவர்களாலேயே அதிகம் பயன்படுத்தப் பட்டது. சில நூல்கள் மட்டுமே பிராமணர்களால் எழுதப்பட்டுள்ளது.
11. வேதவியாசர்,வஸிஷ்டர்,வால்மீகி, கிருஷ்ணர், ராமர், அகஸ்தியர், விஸ்வாமித்திரர், ரிஷ்யஷிருங்கர், கௌதமர், புத்தர், மகாவீரர், துளசிதாசர், திருவள்ளுவர் கபீர்தாசர், விவேகாநந்தர்,
காந்தி, நாராயண குரு போன்றோர் படைப்புகளை நாம் மிகவும் மதிக்கிறோம்! ஆனால் இவர்களில் யாரும் பிராமணர் இல்லை!
12. அதுமட்டுமல்ல எண்ணிலடங்காத பக்தியிலக்கியங்களை படைத்தவர்கள்
பிராமணரல்லாதோர் உள்ளனர்! பின் ஏன் பிராமணரல்லாதோர் எங்களை படிக்க விடவில்லை முன்னேற விடவில்லை என்ற புலம்பல்? ஏன் இந்த மனச்சிதறல் மனப்பான்மை?
13. உண்மையில் பிராமணர்கள் மற்றவர்கள் கற்பதை ஒருபோதும் தடுத்ததில்லை என்பதே உண்மை.
14. பழைய சரித்திரம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புத்தகத்தையும் படித்துப்பாருங்கள்.
பல இடங்களில் 'ஏழை பிராமணன்' என்ற வார்த்தை கண்களில் படுகிறதா இல்லையா பாருங்கள். சங்க இலக்கியங்களிலிருந்து கூட என்னால் இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். புராணத்தில் கூட கிருஷ்ணர் குசேலர் கதை உண்டு.
15. வேதவிற்பன்னர்களாக பிராமணர்கள் மிகவும் மதிக்கப் பட்ட காலத்திலும் அவர்கள் வாழ்வுமுறையென்னவோ 'உஞ்சவிருத்தி' எனப்படும் மற்றவர்கள் ஈயும் தானியங்களை நம்பியே இருந்தது என்பதே உண்மை! காலப்போக்கில் வேறு பல தொழில்கள் செயதாலும் ஆளும் பதவிக்கு வந்ததில்லை என்பதே
நிதர்சனமான உண்மை.
16. நீங்கள் ஆங்கிலமோ அராபி மொழியோ படித்தால் அது உங்களுக்கு வருமானத்தை ஈட்ட உதவும். ஆனால் வழக்கொழிந்து கொண்டிருக்கும் சமஸ்கிருதம் என்ற அற்புதமான தொன்மையான ஒரு மொழியின் உயிர்ப்பை பாதுகாத்து வருவதை சமுதாயத்துக்கு பிராமணர்களின் மிகச்சிறந்த பங்களிப்பாக நான் பார்க்கிறேன்.
17. தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம், தமிழை விற்று தம்மை வளர்த்துக்கொண்ட கூட்டம் எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் சமஸ்கிருத மொழியை காத்து வருவதை மொழி வியாபாரிகள் அதை பிராமணர்களுக்கான மொழி என எள்ளி நகையாடுவது நகைப்புக்குரியது.
உண்மையில் நாட்டில் சிறுபான்மையிராக வெறும் 3% அளவிலுள்ள( உத்தரகாண்ட்டில் மட்டும் 12%) உள்ள அவர்கள் ஒருபோதும் அரசாளாத அவர்கள், ஒருபோதும் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலையில் இருந்திராத அவர்கள், மிதமிஞ்சிய செல்வத்தையோ அதிகாரத்தையோ எப்போதும் நாடாத அவர்கள், தங்கள் நிலையுணர்ந்து கடின உழைப்பில் மற்றும் சிரம நிலையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள்மீது ஏன் இத்தனை துவேஷமும் வெறுப்பும்? அவர்கள் என்ன உங்கள் பிழைப்பை
கெடுத்தார்கள்?
பிராமணர்கள் மேல் நெருப்பள்ளி வீசும் வீணர்களிடம் பதிலிருந்தால் சொல்லுங்களேன்!
No comments:
Post a Comment