Friday, July 1, 2022

வானதியின் கேள்விக்கு பதில் என்ன?

 குஜராத்தில், 2002ல், கரசேவகர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில், ராம பக்தர்கள், 59 பேர் உடல் கருகி பலியாகினர். இதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் மூண்டது. அப்போது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கலவரத்தை மூன்றே நாட்களில் கட்டுக்குள் கொண்டு வந்தது; அதன்பின், ௨0 ஆண்டுகளாக, அம்மாநிலத்தில் எந்த ஒரு கலவரமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.குஜராத்தில் நடந்த கலவரத்துக்கும், மோடிக்கும் கிஞ்சிற்றும் தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஆனாலும், குஜராத் கலவரத்திற்கு காரணகர்த்தாவே மோடி தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மோடியை அரசியலில் இருந்து அகற்ற, மத்தியில் முன்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, 2004 முதல் 2014 வரை பகீரத பிரயத்தனம் செய்தது; இருந்தும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.அதற்கு மாறாக, மூக்குடைபட்டு, தற்போது இருக்கிறதா, இறந்து விட்டதா என்று கேட்கும் அளவுக்கு, மூலையில் முடங்கிக் கிடக்கிறது. 'காங்கிரஸ் தன் பழைய செல்வாக்கை இழந்து விட்டது; அது, தன் இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 'எனவே, அக்கட்சிக்கு ஓட்டளித்து, மக்கள் தங்கள் ஓட்டை வீணாக்கக் கூடாது' என்று ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலாய்த்து, கடித்து துப்பி இருக்கிறார்.'காங்கிரஸ் கட்சியின் துாண்டுதலால், குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தை, மூன்றே நாட்களில் அடக்கிய மோடியையே, கலவரத்துக்கு காரணமானவர் என்று, மனசாட்சியை மறைத்து வைத்து குற்றம் சாட்டுபவர்கள், 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த கலவரம், கடையடைப்பு, சூறையாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, அப்போது, தமிழக முதல்வராக கோலோச்சி கொலுவிருந்த கருணாநிதி தான் காரணம் என்று ஏன் சொல்லவில்லை?' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கலவரங்கள் எங்கு, எப்போது நடந்தாலும், அதனுடன் மதத்தை தொடர்புபடுத்தி, அந்த கலவரத்துக்கு காரணமே பா.ஜ., தான் என்று, நாகூசாமல் குற்றஞ்சாட்டி குளிர் காய்பவர்கள், வானதியின் இந்த கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்... அந்த பதிலை எப்போது வெளியே சொல்லப் போகின்றனர்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...