திருமணம் போன்ற நல்ல சமயங்களில்(விஷேஷங்களில்) "தலை வாழை"- இலை போட்டு, அறு சுவை விருந்து படைப்பது நம் பண்டைய பண்பாடு!அதை இன்றளவும் ஓரளவு பின்பற்றியும் வருகிறோம்!
இதில்- அவ்வளவாகக் குறையொன்றும் சொல்லி விட முடியாது!
ஆனால் பரிமாறும் முறையிலும்,சாப்பிடும் முறையிலும் "நாகரீகத்தை"த் தொலைத்து ,பல வருடங்கள் உருண்டோடி விட்டன!
ஒரு காலத்தில்- பந்தியில் இலைகள் போட்டு, எல்லா வகை பதார்த்தங்களை வைக்க வேண்டிய முறையில் சிறிதும் ஒழுங்கு தவறாமல் பரிமாறிய பின்னர் -ஒரு பொருப்பானவர் "வாங்க!எல்லோரும் வாங்க சாப்பிடலாம்"- என்று அன்போடு அழைத்த பின்னால்,விருந்தினர்கள்-எழுந்து அமைதியாக "தள்ளு முள்ளு"- இல்லாமல் சென்று வரிசையில் அமர்வார்கள்.!
ஒவ்வொரு பதார்த்த மும் பார்த்துப் பார்த்து, வரிசைப்படி (In order) பரிமாறுவார்கள்!
சாப்பிடுவதிலும் -எது முதலில், எது பின்னால் என்று ஒன்றன் பின் ஒன்றாக படைப்பதை சுவைத்து, ரசித்து சாப்பிடு வார்கள்!இதைக் காண கண் கோடி வேண்டும்!
இன்றோ -பரிமாறுவதில் ஒழுங்கும் இல்லை!சாப்பிடுபவர்களோ சாம்பார் போடு, மோர்க் குழம்பு போடு, இங்கு அப்பளம்,நெய் வரவே இல்லை, இங்கே அவியல் கொஞ்சம், ரசம் டம்ளரில் கொடு, பக்கத்து இலைக்கு பாயசம் என்று பல களேபரங்கள்!
சாப்பிடு பவர்களுக்கும் அவசரம்!சாம்பாரையும், ரசத்தை mix பண்ணியும், எதையும், எதனுடனும் கலந்து கட்டி இலையில் செய்யும்- அநாகரீகம் "களேபரம்!"
காணச் சகிக்காது!
விருந்து உண்ணும் "நாகரீகத்தை"த் தொலைத்து,பல ஆண்டுகள் பறந்துவிட்டன!
No comments:
Post a Comment