Saturday, July 16, 2022

திறமையாளர்களைகொண்டாடுவோம்!

 நடிகர் மாதவன், நடிகை சிம்ரன் நடித்த, ராக்கெட்ரி - -- நம்பி விளைவு திரைப்படம் பார்த்தேன். படம் பார்க்கும் அனைவருமே, கண்ணீருடன் தான் வெளிவர வேண்டியிருந்தது. படத்தின் கதை, வஞ்சிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு என்பதை தாண்டி, தேச பக்தியையும், இந்திய விண்வெளி ஆய்வுவரலாற்றையும் பின்னிப் பிணைந்து செல்கிறது.முதல் பாதி முற்றிலும் வறட்சியான விண்வெளி ஆய்வை பற்றியே இருப்பினும், பாமரருக்கும் அலுப்பு தட்டாமல், 'விறுவிறு'ப்பாய் செல்கிறது திரைக்கதை. விண்வெளி ஆய்வின் பிதாமகர் விக்ரம் சாராபாயின், சந்தேகத்துக்குரிய மறைவின் போதே, நாம் சுதாரித்திருக்க வேண்டும்; தவறி விட்டோம்.விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட பழி, நம் விண்வெளி ஆய்வையும், விண்வெளி வணிகத்தையும் வெகுதுாரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதை, நம் தலைவர்கள் யாருமே உணரவில்லை என்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்.    

படத்தின் இறுதியில் நம்பி நாராயணன் கேட்பது போல, 'நான் நிரபராதி என்றால், யார் குற்றவாளி?' என்ற வினாவுக்கு நாம் விடை காண முயல்வது தான், அன்னிய சக்திகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் உள்நாட்டு கைக்கூலிகளையும் அடையாளம் கண்டு, களையெடுக்க உதவும்.குத்துப்பாட்டு, பாடல், விரசம், கவர்ச்சி எதுவும் இந்தப் படத்தில் கிடையாது. வெளிநாடுகளில் தரப்படும் பல மடங்கு வருவாயை புறந்தள்ளி, தேசபக்தியின் காரணமாக, குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் திறமையாளர்களை கொண்டாட வேண்டும் என்பதே படத்தின் நீதி.
அதை நாமும் செய்ய முற்படுவோமாக!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...