Saturday, July 16, 2022

அ.தி.மு.க., கட்சியில் ஒற்றுமை அவசியம்.

 சென்னை ஒரு பக்கம் கட்சி அலுவலகத்தில் அடிதடி, 'சீல்' வைப்பு. இன்னொரு பக்கம் உண்மையான அ.தி.மு.க., எது என்பதற்காக உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் பல வழக்குகள். மறைந்த எம்.ஜி.ஆர்., வாயிலாக துவக்கப்பட்ட இக்கட்சி இப்போது பரிதாப நிலையில் உள்ளது.

'இது அவர்களின் உட்கட்சி விவகாரம்; அவர்களே தீர்த்துக் கொள்வர்; பா.ஜ., தலையிடாது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சொன்னாலும், டில்லி மேலிடம் வேறு மாதிரியாக யோசிக்கிறது. 'வரும் 2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., தான் எதிரி; தி.மு.க.,வை தோற்கடிக்க அ.தி.மு.க., ஒன்றாக இருக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டாவும் சொல்கின்றனராம்.



latest tamil news

அ.தி.மு.க., தலைவர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என அனைவருமே ஒன்றாக இணைந்து அக்கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, பா.ஜ.,வின் இரண்டு தலைவர்களும் விரும்புகின்றனர்.மஹாராஷ்டிராவில், சிவசேனாவை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜ., திட்டமிட்டு வெற்றி பெற்றது.


latest tamil news



தமிழகத்தை போலவே மஹாராஷ்டிராவிலும், 2024 லோக்சபா தேர்தலை சந்திக்கும் போது சிவசேனா ஒன்றாக இருக்க வேண்டும் என பா.ஜ., தலைமை விரும்புகிறதாம். மஹாராஷ்டிராவில் சரத் பவார் தான் எதிரி; அவரை தோற்கடிக்க சிவசேனா ஒற்றுமை தேவை என்கின்றனராம் அமித் ஷாவும், நட்டாவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...