Saturday, July 16, 2022

ஆடி மாதம்...............

 இன்று ஆடி மாதம் முதல் நாள்

தட்சணாயணம் ஆரம்பித்தல்
மார்கழி இறுதி வரை
இதை தட்சணாயண புன்யகாலம் என்று சொல்வார்கள்
ஆடிபண்டிகை என்றும் கொண்டாடுவதுன்டு
காவேரியில் நீராடி நம் பெரியவர்களை மூதாதையர்களை துன்பங்கள் தீர்ந்து வழி பிறக்க பிரார்த்திப்பார்கள்
வடை பாயசத்துடன் சாப்பிடுவது சிறப்பு
தேங்காய் பால் செய்து பூஜை செய்து சாப்பிடுவதும் சிறப்பு
ஆடி மாதம் என்பது கோடை நிறைவடையும் சமயம்
அதனால் தான் திடீரென நிறய வெயில சில நேரம் மழை நிறைய காற்று
போன்ற இந்த சீதோஷ்ன நிலை மாற்றம்
வயிறு சம்பந்தப் பட்ட தொந்திரவுகள் தரும்
அதே போல் அல்சர் உள்ளவர்களுக்கு தேங்காய் பால் வெல்லம் கலந்தது
மிகவும் நல்லது
பழைய கால முறையில் ஆடி மாதப்பிறப்பன்று தேங்காய் பால் முக்கிய இடம் பெற்றது
ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா டாப்பா வருவேன்னு
ஒரு படத்தில் ஜோக் வரும்
உன்மையிலும் அப்படித்தான்
ஆடி ஆரம்பித்த பின் வரும் கிரக மாற்றங்கள் பொதுவாகவே நல்லதை நடத்தும்.
ஆடிப்பூரம் ஆண்டாள் சிறப்பு.. அதுவும் அந்த அக்கார வடைசல் அனுபவித்து உண்ண வேண்டும்.
ஆடி வெள்ளிக்கிழமையில் புற்றுக்கு பால் ஊற்றுவது பிதுர் தோஷம் நீங்கி, திருமண தடை விலகும்.
ஆடி அமாவாசையில் முன்னோர்கள் திதி தருவது பெரியவர்கள் ஆசி கிடைக்கும். உடல் நிலை பாதித்தவர்கள் மீள உதவும்.
பல வருடமாக இறந்தவர்களுக்கு திதி மறந்து போனாலும், தெரியவில்லை என்றாலும், ஆடி அமாவாசையில் செய்தால், அடுத்த வருடம் வரும் போது நிச்சயம் மாற்றம் பார்க்கலாம்.
தடையான நிறைய விஷயம் உடையும்..
குறிப்பாக முன்னோர்கள் சாபம் இருந்தால், கணவர், மனைவி ஒற்றுமை, பெற்றோர்கள் பிள்ளைகள் ஒற்றுமை இருக்காது.
மேலும் ஆடி முடிய அம்மன் விழாக்கள் கூழ் ஊற்றல்
மாலை போட்டு புகழ் பெற்ற அம்மன் சன்னதிகள் செல்வதும் நடைமுறையில் பார்க்கிறோம்.
ஆடி அனைவருக்கும் நன்மை அளிக்கட்டும்..
நம்பிக்கையுடன் தொடர்ந்து, ஓம்சக்தி வழிபாடு செய்து, உயர்வான நிறைய குடும்பங்கள் தெரியும்.
விவசாயம் சார்ந்த நிகழ்வுகள்
நடக்கும்
இறைவன் எல்லோருக்கும் தடைகளை தகர்த்து...அமைதி அளிக்கட்டும்...
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி தாயார் வழிபாடு சிறப்பு.. வீட்டில் செல்வக் குறை வராது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...