Saturday, July 16, 2022

யார் இந்த ஜக்தீப் தாங்கர்.

 நீண்ட அனுபவம்...


துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தாங்கர் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., என அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

இவரது பின்னணி.

* 1951 மே 18: ராஜஸ்தானின் ஜூன்ஜிக்னு மாவட்டத்தின் கிதானா கிராமத்தில் பிறந்தார்.

* 1979: பி.எஸ்சி., இயற்பியல், சட்டப்படிப்பு முடித்துள்ளார். நாளிதழ்களில் சட்டம் தொடர்பான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

* 1987: ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக தேர்வு.

* 1989: ஜனதா தளம் சார்பில் ஜூன்ஜிக்னு லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி., யாக தேர்வு.

* 1990: சந்திரசேகர் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தார்.

* ராஜஸ்தானில் ஜாட் இனத்தவர்களுக்கு ஒ.பி.சி., அந்தஸ்து கிடைக்க போராடினார்.


latest tamil news




* 1993: கிஷான்ஹார்க் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்வு.

* 2003: பா.ஜ.,வில் சேர்ந்தார்.

* 2019 ஜூலை 30: மேற்கு வங்க கவர்னராக பதவியேற்பு.

* 2022 ஜூலை 16: துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...