Monday, July 4, 2022

வாழ்க்கைன்னா போராட்ட குணம் வேண்டும்!

 விபத்து ஒன்றில், தன் வலது காலை இழந்த பிறகு, ௭௭ படங்களுக்கு மேல் நடித்ததுடன், இன்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை சுதா சந்திரன்: நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். திருச்சி அருகேயுள்ள வயலுார் தான் என் பூர்வீகம். என்னோட, ௧௬வது வயதில், சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் போது நிகழ்ந்த விபத்து தான், என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.அப்போ என் பாட்டியிடம் போய், 'எப்பப் பார்த்தாலும், வயலுார் முருகன் நம் குலதெய்வம்; நம்மை எப்பவும் கைவிட மாட்டான்னு சொல்லிக்கிட்டே இருப்பியே? இப்ப எனக்கு இப்படி ஆயிடுச்சே?'ன்னு, அழுதபடி கேட்டேன். உடனே என் பாட்டி, 'இது, பூர்வ ஜென்மத்தில் நீ பண்ணிய கர்மா. ஆனா, இனிமே உன்னோட வாழ்க்கை முழுதும், ஒவ்வொரு நிமிஷமும், உன் கூடவே துணையிருப்பார் அந்த முருகன்.'உனக்கு நம்பிக்கை இருக்கோ, இல்லையோ, எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கு'ன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன வார்த்தைகள், எப்பவுமே எனக்கு துணையா இருக்கு. அதேமாதிரி, 'எப்பவுமே தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது'ன்னு, எங்க அப்பாவும் சொல்லிக்கிட்டே இருப்பார். ஒவ்வொரு விஷயத்தையும், தெளிவா யோசிச்சு அழகா பண்ணும் போது, மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு, நமக்கு எந்த ஒரு டென்ஷனும்

கிடையாது.

அதேமாதிரி, நாம சாதித்து காட்டணுங்கிற நோக்கத்தைத் தவிர, நம்ம மனசுல வேற எந்த நோக்கமும் இல்லைன்னா, எந்த ஒரு விமர்சனமும் நம்மை பாதிக்கவே பாதிக்காது.வாழ வேண்டிய, ௧௫, ௧௬ வயசிலேயே, தேர்வுக்கு பயந்தும், தேர்வில், 'பெயில்' ஆகிடுவோமோன்னு பயந்தும், சிலர் தங்களின் வாழ்க்கையையே முடிச்சுக்கறாங்க... இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கு, விபரீதமான முடிவுகளை எடுப்பது மிகவும் தவறானது. வாழ்க்கைன்னா போராட்ட குணம் வேண்டும். எதிலுமே, போராடித்தான் ஜெயிக்க முடியும்.
தற்போது பெண்கள் எல்லாம், உண்மையிலேயே நிறைய விஷயங்களை தெரிந்தவர்களாக இருக்காங்க. தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய தைரியம் அவர்களிடம் இருக்கிறது.ஆனாலும், எப்பவுமே ஒரு விஷயத்தை நாம் மறக்கவே கூடாது. என் வேலைக்கு நான் போகும் போது தான் நடிகை மற்றும், 'டான்ஸ் ஷோ ஜட்ஜ்'ங்கிற பெருமையை, நான் சுமக்க முடியும். வீட்டுக்கு வந்த பின், என் வேலைகளை நான் தான் பார்க்க வேண்டும். வீட்டைப் பொறுத்தவரைக்கும், நான் ஒரு மனைவி, ஒரு தாய். இதை நான் எப்பவுமே மறப்பதில்லை. என் வேலைகளை, பொறுப்புகளை என்னை தவிர, வேறு யாருமே என்னை மாதிரி பண்ண முடியாது. இதை, நாம எப்பவுமே உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வாழ்க்கை ரொம்ப இனிமையாக இருக்கும்.
வாழ்க்கைன்னா போராட்ட குணம் வேண்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...