'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதால், பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் தன் வாழ்த்து செய்தியில், 'கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பன்னீர்செல்வம், விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன்' என தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'முன்னாள் முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பன்னீர்செல்வம் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, இறைவனை வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிடுவதை தவிர்த்து விட்டார்.
பா.ம.க., தலைவர் அன்புமணியும், ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை தவிர்த்து விட்டார்.மாற்று கட்சியினர் எல்லாம், பன்னீர்செல்வம் விரைவில் குணமடைய விரும்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்கவும் இல்லை; நலம் விசாரிக்கவும் இல்லை.
No comments:
Post a Comment