Wednesday, January 4, 2023

ஆதார் செய்யாத வேலையை மக்கள் ஐ.டி. செய்ய போகிறதா? - அண்ணாமலை கேள்வி .

 தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது கட்சி தலைவராக என் விருப்பம். ஆனால் முடிவு கட்சி மேலிடம்தான் எடுக்கும். அதேபோல எங்கள் கட்சியிலும் சரி, கூட்டணியிலும் சரி எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தின் கடன் வருடந்தோறும் எகிறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.2.63 லட்சம் கடன் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் ஐ.டி. என்ற திட்டம் எதற்கு? ஆதார் செய்யாத வேலையை மக்கள் ஐ.டி. செய்ய போகிறதா? ஆர்.கே.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை அந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் கட்டாயப்படுத்தி சாக்கடையை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நபர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் ஆவார். எனவே இத்தகைய செயலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து, ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும். தி.மு.க., சாதி ஆதிக்கம் மிகுந்த கட்சி என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்று மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் காவல்துறை நேர்மையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...