Tuesday, July 11, 2023

முத்துராமன் .

 ஒரு படத்திற்கு ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்ய வேண்டும் எனில், முதலில் அவர் சொல்லும் நடிகர்களை படத்தில் போட வேண்டும். குறைந்த பட்சம் அவருடன் துணையாக நடிக்க ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்பது அனைத்து முன்னணி நடிகர்களின் கோரிக்கையாக அல்லது கட்டளையாக இருக்கும். அதுபோன்ற துணை கதாபாத்திரத்திற்கு முதல் சாய்ஸ் முத்துராமன்தான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தாலும் கூட அதில் எண்பது படங்களுக்கு மேல் அப்படி துணை கதாபாத்திரம்தான்

எம் ஜி ஆர், சிவாஜி, எஸ் எஸ் ஆர், ஜெமினிகணேசன் , அசோகன், ஜெய்ஷங்கர், சிவகுமார் ,எம் ஆர் ராதா, எஸ் வி சகஸ்ரநாம், பாலாஜி, கே.விஜயன், கல்யாண்குமார், ஏ.வி.எம் ராஜன் , எ ஆர் ராமச்சந்திரன், ஆனந்தன், நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன் ஆகிய அனைவருக்கும் இவர் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார். இதை குறையாக சொல்லவில்லை. எல்லோரும்விரும்பும் ஈகோ இல்லாத அனைவரையும் அனுசரித்து போகிற நடிகராக இவர் இருந்தார் என்பதுதான்
அத்தி பூத்தாற்போல மேற்சொன்ன எவரும் இல்லாமல் இவர் நடித்து இருந்தால் அதில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருக்கும்
அதுபோல, கே ஆர் விஜயாவுடன் நம்ம வீட்டு தெய்வம், தீர்க்க சுமங்கலி,நத்தையில் முத்து ஆகியவற்றிலும் திருமாங்கல்யம் மற்றும் சூர்ய காந்தி படத்தில் ஜெயலிதாவுடன், வாழ்ந்து காட்டுகிறேன் படத்தில் சுஜாதாவுடன் நடித்துள்ளார்.
பிற்காலத்தில், கமல், ரஜினி படங்களில் குணசித்திர வேடங்களில் தோன்றியுள்ளார்.
ஐம்பத்தி இரண்டு வயதிலேயே மாரடைப்பால் காலமானார். அவர் இறந்த பிறகு வெளிவந்த போக்கிரி ராஜாதான் இவரின் கடைசி படம்.
நவரசத்திலகம் என்ற பட்டம் இவருக்கு உண்டு. இருப்பினும் நவரசங்களையும் காண்பிக்கும் வகையில் இவர் வாய்ப்பு பெற்றிக்கவில்லை என்பதே என் கருத்து . இத்துனைக்கும் இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்தவர்தான். எஸ் எஸ் ஆர் நாடக மன்றத்தில் நடித்து புகழ் பெற்றுதான் வந்தார். இருப்பினும் அவர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இறுதி வரை வாய்க்கவில்லை.
இவர் பெரும்பாலும் , நாயகனின் சகோதரன் அல்லது நண்பனாக வருவார் அல்லது பொறாமை கொண்ட கணவன், மனைவியை சந்தேகிக்கும் கணவன் என்ற எதிர்மறை கதாபாத்திரங்களிலேயே தோன்றுவார்.
உணர்ச்சிகளை பிழிந்து காட்டும் கதாநாயகனாகவோ அல்லது உருட்டி மிரட்டும் வில்லனாகவோ வந்ததில்லை. எல்லாமே சாப்ட் ட்ரீட்மென்ட்தான்.
மேற்சொன்ன கருத்துக்கு மாறுபாடான ஒன்று என்றால் நாகேஷ் உடன் இவர் நடித்த அனுபவி ராஜா அனுபவி, காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம்,எதிர்நீச்சல் போன்ற படங்களிலும் , காசேதான் கடவுளடா படத்திலும் நகைச்சுவை வேடங்களில் சிறப்பாக செய்திருப்பார்
ஆனால் இவரது மகன் கார்த்திக் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு தனி ஆவர்த்தனமாகவே பல படங்கள் நடித்து பெயர் பெற்றார் . அவரது மகன் கெளதம் அப்படி பெயர் சொல்லும்படி வருவாரா என்பது தெரியவில்லை ( இன்னும் நிறைய காலம் இருக்கிறது )
யூசர்ஸ் பிரெண்ட்லி என்ற பதம் ஆங்கிலத்தில் உண்டு. அதன் பொருள் பயன்படுத்த எளிமையானது, உபத்திரவமில்லாதது என்பதாகும். அதுபோன்ற இயந்திரங்கள் தற்போது நிறைய உண்டு. ஏன் கணினியே அவ்வகையானதுதான். ஒரு நடிகராக இவரை அப்படி சொல்லலாம்.
அதாவது எந்த வேடமானாலும் கர்ம சிரத்தையுடன் அதை செய்து கொடுத்து அது வெற்றிபெறுமானால் அதன் தன் பங்காக சிறு துளியை மட்டுமே எடுத்துக்கொண்டு திருப்தியடைவது என்பது இவர் போன்ற ஒரு சிலராலே முடியும்
அந்தவகையில் இவர் சிறந்த யூசர்ஸ் பிரன்ட்லி என்று சொல்லலாம்.
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...