சில விளக்கங்கள்
ஆண் வாரிசு இல்லாத தம்பதியர் குல தெய்வம் எங்கு செல்லும் ?
கோபமான குல தெய்வம் எத்தனை வருடம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வரும் ?
பல வருடம் கழித்து கண்டு எடுத்த குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டுமா ?
குல தெய்வத்தின் கோவில்களில் பல தெய்வங்கள் உண்டா?
ஆண் தெய்வத்தை அல்லது பெண் தெய்வத்தை மட்டும் வணங்குதல் நன்மையை தருமா?
ப்ரம்மஹத்தி தோஷத்தினால் சுடுகாட்டில் வந்து அமர்ந்த ஈசனை தேடி மனைவி மற்றும் பூத கணங்களும், தேவர்களும் தேவியரும் பூமிக்கு வந்து மாரியம்மன் முனியப்பன் என்ற சிவ சக்தி அவதாரத்தை வழிபாடு செய்து வந்தனர்.
அதி சக்தியால் அன்னத்தை பெற்றவுடன் பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனின் கைகளை விட்டவுடன் கயிலைக்கு சிவ சக்தி சென்றதும் பூமிக்கு வந்த தேவர்கள், பூத கனங்கள் இங்கேய தங்கி விட்டது, இவைகள் தான் தேவதைகள்.
ஆண் தேவதைகளுக்கு முனி ஈஸ்வரனும்
பெண் தேவதைகளுக்கு மஹாமாய மாரியும் தலை தெய்வம்களாக இருந்து உலகில் தர்ம பரிபாலன ராஜ்ஜியம் நடத்தும் தெய்வங்கள் என்று சொல்ல படுகிறது...
இவர்களின் அதாவது இவர்களின் வம்ச வழியில் வந்தவர்களுக்கு அவர்கள் குல தெய்வம் தான் இந்த தெய்வம்கள் ....
இவைகளை பற்றி அதர்வண வேதத்தில் பல விவரங்களை காணலாம் ...
மருளாளிகள் சொல்வது ...
முனி தான் சிவன், இவருக்கு பெரிய சாமி, சுடலைமாலை சாமி, மலையாள முனி என்று பல ஊர்களில் பல பெயர் உண்டு.
இவரின் மகன் அம்சம் பெருமாளின் அவதாரம் கருப்பு சாமி வகையாறா ஆண் வீரர்கள் ...
முனியின் சகோதர அம்சம் அய்யனார் வகையாறா காளியுடன் வீரர்கள்!
இவர்கள் மூவரும் சக்தி தேவியருக்கு காவலாக பூமிக்கு வந்தார்கள்.
பெண் தேவியர்கள் இவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
மாரியம்மனுடன்--முனி சாமியும்
காளியுடன் --அய்யனாரும்
நாக தேவதை /காமாட்சி தேவியுடன் --கருப்பு சாமியும்...
இது போன்ற தேவியருடன் அவர்கள் பாதுகாப்புக்கு மற்றும் எல்லை காவல்காரர்களாக இருப்பார்கள்.
இது எளிமையாக சொல்லப்பட்ட விவரங்கள், கோவிலின் அமைப்பை பொறுத்து மாறுபடும் ...
இது அடிப்படை விவரம் ....
முன்னோர்கள் கூட்டாக பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்தார்கள், காலப்போக்கில் தொழில் மாற்றம், குடும்பம் அமைவது போன்ற காரணத்தினால் எல்லை விட்டு வேறு இடம் வந்து பழக்கத்தை மாற்றி குறைத்து வழிபட்டு சரியான ஆசிகளை பெறமுடியாமல் வாழ்கிறார்கள் ...
ஒரு குலத்தில் காமாட்சியை வழிபாடு செய்கிறார்கள் என்றால், சுத்த பூஜை செய்யும் குடும்பம்.
இதே காமாட்சி படைகளின் அதிபதி /பணியாள் அங்காயியை வழிபாடு செய்பவர்கள் அசைவ பூசை செய்யும் குடும்பம்,
முன்னோர்கள் சொன்னால் தான் குல தெய்வ முறைகள் இளைய தலைமுறைகளுக்கு தெரிய வரும், அல்லது கோவில் பூசாரிகள் சொல்படி கேட்டு செய்ய வேண்டும்.
மாற்றி பூசைகள் போடுவது மல்லிகை பூவை வைக்கும் இடத்தில் மாமிசத்தை வைப்பது போல ....
தன்னுடைய குலத்தை தானே முடித்து கொள்ளும் தெய்வங்கள் இப்படி செய்த பூசைகளினால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ராணஹத்தி செய்து கொள்வது,
குழந்தை இல்லாமல் செய்வது,
வம்சம் விருத்தி இல்லாமல் செய்வது
இவைகள் எல்லாம் குல தேவியின் அனுமதியோடு நடக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்!
ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிறக்க வைப்பது குறிப்பாக ஆண் குழந்தைகள் பிறக்க வைப்பது இவர்கள் தான்.
திருமணத்திற்கு பின்பு தனியாக சமையல் (தனி குடுத்தனம்) செய்ய ஆரம்பித்தவுடன் அவர்களிடம் அழைப்பு வந்தவுடன் வந்து சேர்ந்து விடும், இந்த குல தெய்வம்.
பெண்களை பெற்றவர்கள் வீட்டில் அவர்களுடன் இருக்கும் குலதெய்வம்,
அவர்களுக்கு பின் கோவிலுடன் ஒடுங்கி விடும்.
சிலர் மகளோடு கடைசி காலத்தை கழிப்பார்கள், இப்படி வாழும் குடும்பத்தில் கணவரின்
(மருமகனின் குலதெய்வம்)
குலதெய்வம், பெற்றோரின் குலதெய்வமும் சேர்ந்து அந்த வீட்டில் இருக்கும்... (இது சுவடியில் கும்பமுனியால் பதியப்பட்ட விவரம்).
இவர்கள் இருவருக்கும் தனி தனியாக படையல் வைக்க வேண்டும். (அவர்களின் குடும்ப வழக்கத்திற் ஏற்ப)
இங்கேய இரு குலதெய்வங்கள் இருக்கும். அந்த குடும்பத்தில் வந்து சேர்ந்த பெரியோர்கள் (மாமியார், மாமனார் ) இறந்த பின்பு அந்த குடும்பத்தை விட்டு சென்று விடும்...
பெண்கள் திருமணம் ஆன பிறகு கணவனின் குல தெய்வத்தை வணங்குவது தான் அவர்களுக்கு மேன்மை தரும் ...
குடும்ப பிரச்சனை, சொத்து பிரிப்பு போன்ற சம்பவத்தினால், ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மற்றவர் (பங்காளிகள் ) நலனை கெடுக்க தவறான பாதையில் செல்வார்கள்.
குறிப்பாக ஏவல், பில்லி, சூன்யம் போன்ற செயல்களில் செய்து, அவர்களாய் வினைகளை தேடி கொள்வார்கள்!
இங்கே ஒரு விவரத்தை மிக மிக அவசியமாக புரிந்து கொள்ளல் வேண்டும் ...
தவறான காரியங்களும், தேவதைகளை கொண்டு தான் செய்ய முடியும். தேவதைகள் நன்மையும் செய்யும், தீமையும் செய்யும்!
குலதெய்வங்கள் நம்மை காப்பாற்றுவதை விட்டு விட்டால் நம்மை காப்பாற்ற தேவதைகளிடம் இருந்து நம்மை காக்க ஒரு சக்தியும் நெருங்காது .....
பிறரின் சூழ்ச்சியால் தெய்வங்கள் நம்மை விட்டு சென்று விடும், இது பலரின் வாழ்வில் நடப்பது உண்டு...
பிறரால் வெளியேற்றப் படுவது என்பது அவர்களுக்கு பிடிக்காத பூசைகள், தவறான செயல்கள் செய்வது...
சிலர் வீட்டில் தலைகாளி, வடுக பைரவி, வன துர்கா, மாசாணி, சுடலை சாமி, மயான கருப்பு போன்ற தேவதைகளை வைத்து வழிபடுகிறார்கள்
இவைகள் குடும்பத்திற்கு ஆகாது .....
பல வருடம் கழித்து குல தெய்வத்தை அறிந்தவுடன் (அவர்கள் உங்களிடம் வந்தார்கள்/வருவார்கள்) கண்டிப்பாக அவர்களை பூஜிக்க வேண்டும் ....
எல்லா குல தெய்வ கோவில்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தேவதைகள் உண்டு தெய்வம் ஒன்றுதான் இருக்கும். ஊரின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அங்கே பட்டவர்களாக இருப்பார்கள்.
சில வகையினர் அவர்களின் வழியே ஒரு தேவதையை மருளாளிகளின் ஆலோசனையோடு அங்கே பிரதிஷ்டை செய்து இருப்பார்கள் ...
சில கோவிலில் பிரதான தேவி காத்து ரட்சனை செய்யும் காத்தாயி என்கிற கார்த்திகாயினி. இவருக்கு காவலாக மலையாள முனி என்னும் தவசி தூய வால்முனி என்று அழைப்பார்கள்.
இங்கே சங்கிலி வீரன், ஒண்டி வீரன், கார்த்த வீரன், அக்னி வீரன், பேச்சியாயி, மாரியாயி, மற்றும் முருகன், பிள்ளையார், சிவன் ...
இங்கே மற்ற சமூகத்தினர் வழிபாடு செய்யும் தேவைதைகள் தான் இந்த வீரர்கள்.
அசைவ படையல், பலியிடுதல், வேட்டைக்கு போகுதல் எல்லாம் இவர்களுக்கு தான்.
அம்பாளுக்கு சுத்த பூசைமுறைகள் மட்டுமே உண்டு ..
இப்படி தான் எல்லா கோவில்களிலும் உண்டு. சில குடும்பம்கள் தன்னுடைய குலதெய்வ கோவில் அமைப்பை புரிந்து கொள்வது இல்லை ...
இதனால் தான் பிரச்சனைகள் துவங்குகிறது.
No comments:
Post a Comment