*எம்பெருமானார் தர்ஸநத்தை சேர்ந்தவர்களுக்கு நவராத்ரி!*
ஸ்ரீரங்கத்தில் இன்று முதல் பெரியபிராட்டிக்கு நவராத்ரி கொண்டாடுகிறோம்!
ஆகவே, இந்த ஒன்பது நாளும் ஸ்ரீ ராமன் வரவால் சீதாபிராட்டி ஆசையுடன் காத்துக்கொண்டிருக்கும் அந்த மனோ நிலைப்பாட்டை, அதாவது சக்ரவர்த்தி திருமகனின் கல்யாண குணங்களைக் குறிக்கும் ஸ்ரீ ராமாயணத்தில் நடந்த பல திவ்ய வைபவங்களை இதில் அனுபவிக்க வேண்டும்!
ஸ்ரீ ராமாயணத்தில் நடந்த ஜடாயு மோக்ஷம், வாலி வதம் , தாடகா வதம், குஹன் பெற்ற பாக்யம், சபரி பெற்ற பாக்யம், அசோக வனத்தில் இருந்த பிராட்டிக்கு திருவடி தூது வந்தது, விபீஷண சரணாகதி, என பல வைபவங்களை கொலுவில் வைத்து, ஸ்ரீ ராமனை நினைத்து கொண்டாடலாம்!
முதன் முதலில் நவராத்திரி முழுக்க ஸ்ரீ ராமாயணத்தைக் கொண்டாடவே ஏற்பட்டதாம்! பிற்காலத்தில் சாக்தம் கலந்துவிட்டதால், இது ஏதோ ஸ்த்ரீகள் பண்டிகை போலவும், இதர லௌகீக விஷயமாகவும் மாறிவிட்டது.
ஸ்ரீ ராமாயணத்தை, கிரந்தமாய் *(ஸ்ரீகோஷம்)* கொலுவில் ஏளப்பண்ணுவதும் அதற்கு விசேஷ திருவாராதனம் அனுஷ்டிக்கும் வழக்கமும் இருந்தது!
ஸ்ரீ ராமனின் ஆராதனைப் பெருமாளான, நம் பெரியபெருமாள் தான் ராமனை இலங்கை சென்று ராவணனை முடித்துவிட்டு வரும்படி நியமிக்க, அதை ராமன் நிறைவேற்றுகிறார்!
ஆக, ராவணனை வென்றது பெரியபெருமாளே!
*அதனால்தான், ராவணனை ராமன் ஜெயித்த விஜயதசமியன்று நம்பெருமாள், காட்டழகியசிங்கர் கோயிலுக்கு குதிரை வாகனத்தில் ஏள்ளி, அங்கு அம்புவிடும் வைபவம் நடக்கிறது!*
ஸ்ரீ ராமாயண வைபவங்களுடன், ஆழ்வார்கள் ஆசார்யர்களின் பொம்மைகளை வைத்தால், ஸத்தானுபவம் மேலும் கூடும்.
No comments:
Post a Comment