Tuesday, October 17, 2023

தமிழக மற்றும் தமிழின துரோகிகளில் அவனும் ஒருவன்.

 ரஜினிகாந்தர் உண்மையிலே விஜயண்ணாவினை கண்டு அஞ்சுகின்றார் போலிருக்கின்றது, சினிமாவில் தன் காலம் வரை தானே முதலிடம் என்பதை காட்ட முடிவெடுத்துவிட்டார் போலிருக்கின்றது

அவரிடம் ஒரு மாற்றம் தெரிகின்றது
முன்பெல்லாம் அவரின் படபிடிப்புகள் தமிழகத்தில் நடக்காது, 1995க்கு பின் எந்த படபிடிப்பையும் அவர் தமிழக ஸ்டூடியோக்களை தாண்டி வெளிமாநிலங்களில்தான் நடத்துவார்
தமிழகத்துக்குள் அவர் சுற்றி படமெடுத்து 40 ஆண்டுகள் இருக்கலாம்
இப்போது அன்னார் நெல்லைபக்கம் சுற்றி திரிகின்றார், குடிக்க நீர் இல்லை என்றாலும் அந்த மக்களும் கார்மேகத்தை கண்ட மயில் போல் ஆடிகொண்டிருக்கின்றார்கள்
பெரும் கூட்டம் ரஜினியார்க்கு கூடுவதை கண்டு ஆனந்த அழுகையில் கதறி கதறி அழுது கொண்டிருக்கின்றான் .
ரஜினி கார் சென்ற மண்ணில் புரண்டு உருண்டு நெற்றியில் பூசி ஏக அழிச்சாட்டியம்
இனி அவன் உண்ணவும் உறங்கவும் சில நாட்கள் ஆகலாம், ரஜினி தமிழகத்தில் தன் பழைய கூட்டத்தை காட்ட விரும்புகின்றார், விஜயண்ணாவுக்கு ஏதோ சொல்ல விரும்புகின்றார் என்பதுபோல் காட்சிகள் நடக்கின்றன‌
இனி விஜயண்ணா கும்பல் என்னென்ன திட்டமிடுமோ தெரியாது, தமிழகத்துக்கு ஏதும் சோதனை வராமல் இருந்தால் நல்லது
முன்பு ரஜினி ஏன் ஐதராபாத் ஸ்டூடியோவில் இருக்கின்றார் , அரசியல் கட்சியும் இல்லை என கேட்டால் அவருக்கு உடல்நலம் சரியில்லை தொற்று ஏற்படும் அதனால்தான் கட்சி இல்லை அரசியல் இல்லை என்றார்கள்
இப்போது தொற்றும் இல்லை, நோய் அச்சுறுத்தலும் இல்லை எல்லாம் சரியாகிவிட்டது..எல்லாம் விஜயண்ணா கொடுத்த மருந்து போலிருக்கின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...