மதிப்பிற்குரிய கமல்..
பெரும்பாலான சமயங்களில் சொந்த பாதிப்புகள் பற்றி யோசிக்காமல் நியாயத்திற்காகக் குரல் கொடுத்தவர் / கொடுப்பவர் நீங்கள் என்பதால்..
இப்போதும் ஒரு விஷயத்தில் நியாயத்திற்கான உங்கள் குரலை பிக் பாஸில் எதிர்பார்க்கிறேன்.
அவரின் கூற்றின்படி..
அவரைப் பற்றிய பிம்பம் மோசமாக பதிவாகும்படி நிகழ்ச்சி வெட்டி, ஒட்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
அந்த வீட்டில் எச்சில் துப்பவில்லை என்கிறார். அது பிரதீப் வைத்த கேம் பிளான் பொய் குற்றச்சாட்டு என்கிறார். கடவுளே வந்து சொன்னாலும் என் இயல்பை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பது வேறு கருத்துக்கான தன் பதில் என்றும் நடுவில் வெட்டி ஒட்டி தன்னைப் பற்றி தவறாக முன்னிறுத்திவிட்டார்கள் என்கிறார். இதையெல்லாம் வெளியில் வந்துதான் பார்த்து உணர்ந்து வருந்தினேன் என்கிறார்.
அவர் போட்டியாளர்களில் ஒருவர் என்பதற்கு முன்னாலும் பின்னாலும் உங்கள் நண்பர்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள் என்பது தெரியும். நினைவூட்டுகிறேன். அவ்வளவே.
No comments:
Post a Comment