Sunday, August 22, 2021

உங்களது வீட்டு பூஜை அறையின் பின்னால் உள்ள சூட்சும ரகசியங்கள்!

 உங்கள் வீட்டு பூஜை அறையில் சின்னதா(கட்டை விரல் அளவிற்கு) அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.

பிறகு கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108 போற்றி,காயத்ரி மந்திரங்கள் இவற்றை உச்சரிக்கவும்.
ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது ஏதேனும் உதிரி வாசனை மலர் பூவை எடுத்து ஐம்பொன் சிலை மீது போட்டு வணங்குங்கள்.
உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்.
இந்த வழிபாட்டிற்கு பின்னால் உள்ள சூட்சுமங்கள்.
ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் இருக்கு
தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,
வெண்கலம்.இவை அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது.
நீங்க பால் அபிசேகம் செய்யும்போது அதன் நற்குணங்களை ஐம்பொன் சிலையில் உள்ள செவ்வாய் அம்சமான செம்பு,சனி அம்சமான இரும்பு,குரு அம்சமான தங்கம் சுக்கிர அம்சமான வெள்ளி,ராகு,கேது அம்சமான வெங்கலம் ஆகிய உலோகங்கள்
ஈர்த்துக்கொள்கிறது.
நீங்கள் மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில் இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை ஈர்த்துக்கொள்கிறது.
பிறகு அவை ஐம்பொன் சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக பரவுகிறது.
இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக மாறிவிடுகிறது.
காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது....
நீங்கள் கூறும் மந்திரங்கள் சாமியை புகழ்வது என நினைச்சீங்கன்னா உங்களது எண்ணத்தை உடனே மாத்திக்குங்க.
ஏன்னா..இதுக்கு வேதாத்திரி மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்.
"வாழ்க வளமுடன்" அப்படீன்னு நீங்க உச்சரித்ததும் அது வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது.
ஆக உச்சரிச்ச நீங்க "வளமுடன் வாழ்வீங்கன்னு வேதாத்திரி மகரிஷி சொல்கிறார்.
இப்போது புரிகிறதா?மந்திரம் கூறுவதின் சூட்சுமத்தை.
பூஜை,மந்திரம் சொல்லி வழிபடுதல் எல்லாம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்பதை.!!!
சரி! இனி உங்கள் வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?என்பதை பற்றி பார்ப்போமா?
மனதிற்கு நிம்மதியை தருவது கோவிலில் உள்ள ஆண்டவன் சன்னிதி.
அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும் அமைக்க படவேண்டும்.
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.
பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்.
அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும்.
இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.
பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு.
அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும்.
அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு.
இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும்.
அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
எந்த ஒரு பூஜை அறையும் மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம்.
இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.
அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும்.
அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...