Saturday, August 21, 2021

மனிதனை மனிதன் தண்டிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

 தாலிபானை திட்டினாள் இந்தியாவில் உள்ள சிலபல முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வருகின்றது என பலர் நினைக்கலாம்

தாலிபான் தவறு செய்யும் நிலையில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் தாலிபானுக்கு முட்டுக்கொடுக்க மாட்டான் ,
தாலிபானை திட்டுகின்றேன் என்கின்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான விஷத்தை கக்குகின்ற பாசிச மீடியாக்கள்
தாலிபான் குறித்து தவறாக பேசும்போது அதனுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்கின்ற வார்த்தையை திட்டமிட்டே சேர்த்து தவறாக பரப்புகின்றனர்
இஸ்லாமிய அடிப்படை பெண்களுக்கு எதிரானது போலவும் , இஸ்லாமிய அடிப்படை கொடூரமான மனிதவிரோத செயல்களில் ஈடுபட சொல்வதுபோலவும் தாலிபானுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்கின்ற சொல்லை சேர்த்து இஸ்லாம் என்றாலே கொடூரம் என்கின்ற தவறான விதையை மக்கள் மனதில் விதைக்க முயற்சிக்கின்றர்
இஸ்லாத்தை தவறாக சித்தரிப்பவர்களுக்கு பதிலடியாகத்தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தாலிபான் சம்பந்தப்பட்ட விசயத்திற்கு பதில் கொடுத்து வருகின்றனர்
பெண்களுக்கான கல்வியை இஸ்லாம் வலியுறுத்துகின்றது , பெண்ணாளுக்கான கல்வியை தாலிபான் தடை செய்தால் அதை முஸ்லிம்கள் கண்டிப்பார்கள்
மனிதநேயத்தை இஸ்லாம் அதிகளவில் போதிக்கின்றது , மனிதநேயத்திற்கு மாறாக தாலிபான்கள் நடந்துகொண்டால் இந்திய முஸ்லிம்கள் தாலிபானை எதிர்க்கவே செய்வார்கள் ,
வல்லரசு என்கின்ற திமிரில் இன்னொரு நாட்டு மக்கள் மீது போர்தொடுத்து அப்பாவி மக்களை அநியாயமாக கொண்றுகுவிக்கும் அமெரிக்காவிற்கு எதிராக தன் சொந்த நாட்டை சொந்த நாட்டு மக்களை பாதுக்காக்க தாலிபான்கள் போராடி வென்றிருந்தால் அந்த வெற்றியை இந்திய முஸ்லிம்களில் சிலரோ பலரோ வரவேற்கவே செய்வார்கள்
அடுத்த நாட்டு வெற்றியை வரவேற்க்கிண்றீர்களே இது மதவெறி இல்லையா என சிலர் கேட்கலாம் ?
ஒரு முஸ்லிம் தவறு செய்யும்போது அந்த தவறான முஸ்லிமை ஆதரிப்பதுதான் மதவெறி அந்த தவறை இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் நிச்சயம் செய்யமாட்டான்
இலங்கையில் தமிழீழம் அடைந்தாள் இந்தியாவில் உள்ள உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சந்தோசப்படுவோமே அதுபோன்றுதான் இதுவும்
மும்பையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்பட்டோமே அதுபோன்ற உணர்வுதான் இதுவும்
சந்தன வீரப்பனை எதிர்த்து இந்திய தமிழக அரசுகள் தாக்குதல் நடந்தபோதும் வீரப்பன் மீது தவறில்லை போலீசார் மீதுதான் தவறென்று கூறி வீரப்பனை இன்று வரை டி ஷர்ட்களில் போட்டும் பேனர்களில் அவரது படத்தை போட்டும் அவரின் சமுதாயம் கொண்டாடுகின்றதே அதுபோன்ற உணர்வுதான் இதுவும்
விடுதலை புலி பிரபாகரனை இந்திய அரசும் இலங்கை அரசும் தமிழக அரசும் தடை செய்தபோதும் பிரபாகரன் அவர்கள் மீது தவறில்லை இலங்கை இந்திய ராணுவத்தின் மீதுதான் தவறு என்று கூறி பிரபாகரன் அவர்களின் படத்தை டி ஷர்ட்டிலும் பேனர்களிலும் போட்டு அவர்களை பல தமிழர்கள் கொண்டாடுகின்றார்களே அதுபோன்ற உணர்வுதான் இதுவும் , சீனா ரஸ்யா போன்ற கம்யூனிச நாடுகளுக்கு எதிராக இருக்கும் அமெரிக்காவை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்களும் வெறுக்கின்றார்களே அதுபோன்ற உணர்வுதான் இதுவும் ,
திருநெல்வேலியில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்படும்பொழுது சென்னையில் உள்ள அந்த சமுதாயத்தினருக்கும் ஓர் உணர்வு ஏற்படுகிறதே அதுபோன்ற உணர்வுதான் இதுவும் , இன்னும் இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
இஸ்லாம் இனவெறியை வெறுக்கின்றது ,
இனவெறியை தடை செய்கின்றது
யார் தவறு செய்தாலும் தவறுதான்
யார் சரியாக செய்தாலும் சரிதான்
முஸ்லிம் தவறு செய்தால் தவறென்று சொல்லணும் எனவும் , முஸ்லிம் அல்லாதவர்கள் சரியாக செய்தால் சரி என்று சொல்லணும் என்றே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றது
முஸ்லிம்கள் பின்பற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
தன் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று ,
திருக்குரானில் இறைவன் கூறுகின்றான்
"ஓர் மனிதரை அநியாயமாக கொன்றவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொன்றவர் போலாவார்" என்று
அதுபோலவே " ஓர் மனிதரை வாழவைத்தவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வாழவைத்தவர் போலாவார்" என்றும் திருக்குரானில் இறைவன் கூறுகின்றான்
இறைவனை ஏற்று நபிகள் நாயகத்தை தூதராக ஏற்று அதன்படி வாழும் எந்த முஸ்லிமும் தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை
ஆதரிக்கமாட்டான் மாறாக தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராகவே இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் இருப்பான்
*இஸ்லாத்தின் வளர்ச்சி*
அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட பெரும் நாடுகளிலும் உலகவில் பல நாடுகளிலும் இஸ்லாமிய கொள்கைகளை விரும்பி கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுவருகின்றனர் , இதனை பொறுத்துக்கொள்ள முடியாத உலகளவிலான பாசிச இஸ்ரேல் அமெரிக்க உள்ளிட்ட பெறும் நாடுகளும் இந்தியாவில் உள்ள பாசிச கும்பல்களும் இஸ்லாத்தை கொடூர மார்க்கம் போன்று திட்டமிட்டு தவறாக சித்தரித்து வருகின்றது அந்தவகையில்தான் தாலிபான் என சொல்லும்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்
தாலிபானை திட்டமிட்டு கொடூரமாக காட்டும்போது மக்கள் இஸ்லாத்தையும் சேர்த்தே தவறாக நினைப்பார்கள் என பாசிச கும்பல்கள் நினைத்து விஷத்தை பரப்பிவருகின்றது , இதுபோன்ற சூழ்ச்சியாளர்களை குட்டும்வகையில்
திருக்குரானில் இறைவன் கூறுவதை பாருங்கள்
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.
திருக்குர்ஆன் 9:32
May be an image of 7 people, people standing, headscarf and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...