அவர் ஒரு தலித்!
அதாவது பட்டியல் இனத்தவர்!
அவர் இறந்தே போனார்!
வாழ வேண்டிய வயது!
அவர் பெயர் வெற்றி மாறன்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இல்லத்தின் முன்பு
கடந்த வாரம் தீக்குளித்தார்.இன்று இறந்தே போனார்.
உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிட
விரும்பினார்.அவர் திமுகவைச் சேர்ந்தவர்.
உள்ளூர் திமுகவினரும் மற்றும் சாதிய சக்திகளும்
இவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை.
இதைக் கண்டித்துத்தான் அவர் முதல்வர் வீட்டின்
முன்பு தீக்குளித்தார்.
எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.
எல்லாம் விலைபோன ஊடகங்கள்.
Freelance journalists என்ன ஆனார்கள்?
அவர்கள் கவர் வாங்கி விட்டார்கள்.
தலித்துகளுக்காகவே கட்சி நடத்துகிறாரே
திருமாவளவன்!!!! அவர் என்ன செய்தார்?
கண்டுக்காமல் இருக்கிறார்!
கள்ள மௌனம் காக்கிறார்!!!
திமுக அரசுக்கு எதிராக திருமாவளவனால்
ஒரு பெருமூச்சுகூட விடமுடியாது. சபரீசனும்
உதயநிதியும் தங்கள் கைகளில் முட்கள்
பொருந்திய நீண்ட சவுக்கை வைத்துக்
கொண்டு இருக்கிறார்கள். முதுகுத்தொலியை
உரித்து எடுத்து விடுவார்கள்.
ஆனால் இன்றில்லாவிடினும் நாளை
பட்டியல் இனத்தவர்கள் தங்களின்
இனத்தான் வெற்றி மாறனின் சாவுக்குப்
பழிவாங்குவார்கள். அப்போது அவர்களுக்கு
மானமுள்ள ஒருவர் தலைவராக
வாய்த்திருப்பார்.
------------------------------------------------------
No comments:
Post a Comment