Friday, July 1, 2022

பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்குமா?

 நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டது. இந்த பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்கும் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மை இல்லை என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பூண்டு பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவற்றை நீக்கும் தன்மை கொண்டது என்பது உண்மை தான். ஆனால் பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்குமா என்றால் கிடையாது. பூண்டை மூக்கில் வைக்கும்போது அதன் வாடை அதிக சளியை உருவாக்கும். அதனால் மூக்கில் இருந்து சளி வடிவதற்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.  இதனால் அந்த வீடியோக்களை கண்டு ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...