Friday, July 1, 2022

உயர் நீதிமன்ற உத்தரவு சூப்பர்!

  மதுக் குடிப்போர், பாட்டில்களை ஆங்காங்கே வீசி எறிவதால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வித்திடுகிறது என்பது நிதர்சனம். குறிப்பாக, வயல்வெளிகளிலும், ஆறுகள், வாய்க்கால் ஓரங்கள், சுடுகாட்டிற்கு செல்லும் பாதைகளில் வீசி எறிவதால், உடைந்த கண்ணாடி பாட்டில்கள் குத்திக் கிழித்து, எண்ணற்ற விவசாயிகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு

அல்லல்படுவதை அன்றாடம் காண நேரிடுகிறது. மேலும், மதுப் பிரியர்கள் மதுவை அருந்தியதும், காலி பாட்டில்களோடு தாங்கள் எடுத்துச் செல்லும் தின்பண்டங்களின் மிச்சத்தையும், அப் படியே மூட்டையாக கட்டி பிளாஸ்டிக் பைகளில் வீசி எறிவதால், அதைப் பிரித்து உண்ண முடியாமல், கண்ணாடி பாட்டிலோடு சேர்த்து, தெருவில் திரியும் மாடுகள் உண்ணுகின்றன.
அப்போது, பாட்டிலால் வாய் கிழிந்து, ரத்தம் சொட்டச் சொட்ட மாடுகள் அலையும் அவலங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன.மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால், மலை வாசஸ்தலங்களில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது; இத்திட்டம் நல்ல பலனை கொடுத்திருக்கிறது. அதனால் தான், 'மாநிலம் முழுதும் செயல்படுத்த வேண்டும்...' என, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மதுவிலக்கு துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது, மிகவும் வரவேற்கத்தக்கதே. இதில், எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமளிக்காமல், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தை தமிழகம் முழுதும் செயல்படுத்த வேண்டும் என்பதே, அனைத்து மக்களின்
எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...