Monday, July 18, 2022

நடிகர் பிரதாப் போத்தன்.

 பிரபல நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் திரையுலகில் சோகம்

அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69.
1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன்.
1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
பிரதாப் போத்தன் காலமானார்
மூத்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69. 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன். 1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
சென்னையில் வீடு
தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் பிரதாப் போத்தன் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தான் உயிர் துறந்துள்ளார். அவரது உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகம் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.
சிறப்பான அஞ்சலி
எதார்த்த கலைஞனுக்கு..
ப.கவிதா குமார்
உருவக் கேலி செய்பவர்களை உலுக்கிப் போடும் ரியல் கேரக்டர் தான் பிரதாப் போத்தன். எத்தனை திறமை மிகுந்த மனிதர்... இன்று நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளார். நடிகராக, இயக்குநராக, ராஜாவின் ரசிகராக திகழ்ந்த பிரதாப் போத்தனுக்கு என் இதய அஞ்சலி ❤️
பிரதாப் போத்தனும், மூன்று பாடல்களும் . . .
========
மனம் பாரமாகும் போது பாடல்களைக் கேட்பதும், புத்தகங்களுக்குள் புதைந்து கொள்வதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்பாவின் நினைவலைகள் அழுத்த நேற்று பாடல்களுக்குள் புதைந்து கிடந்தேன். அப்படி கேட்ட சில பாடல்கள் தான் இந்தப் பதிவை எழுத வைத்தது.
நான் கேட்ட மூன்று பாடலும் நடிகர் பிரதாப் நடித்தது. மூன்றும் வெவ்வேறு விதமான ரசனையைத் தரக்கூடிய பாடல்கள்.
தேடினேன் வந்தது என்ற படத்தில் நடிகை மந்த்ராவை கொல்வதற்காக அஷ்டகோணலான கொலை செய்ய பலமுறை முயற்சி செய்பவராக, அதாவது அதிசயபிறவி படத்தில் சுதாகர் போன்ற கேரக்டரில் பிரதாப் நடித்திருப்பார். அப்படிப்பட்ட பிரதாப்பை உங்களுக்குப் பிடிக்குமா என்ற உங்களின் கேள்வி நியாயமானது. ஆனால், அது மட்டும் தான் பிரதாப்பா ?
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கமலஹாசன், திலகன், மோகன்லால், சத்யராஜ், கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரகுவரன் உள்ளிட்ட பலரை இயக்கிய இயக்குநர் அவர். மகேந்திரன், பாலு மகேந்திரா, பரதன், மணிரத்னம், கே.பாலசந்தர், விசு. மணிவண்ணன், கேஎஸ். அதியமான், ராஜசேகர், சந்தான பாரதி, பி வாசு, விஷ்ணுவர்தன், சிங்கீதம் சீனிவாசராவ், கிருஷ்ணமூர்த்தி போன்ற அற்புதமான இயக்குநர் படங்களில் நடித்தவர்.
தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா ,வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், மகுடம் ,ஆத்மா ,சீவலப்பேரி பாண்டி ,லக்கி மேன், தேடினேன் வந்தது உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் . மலையாளத்தில் ரிதுபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரா மொழி உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். பாலுமகேந்திராவிற்கு அடுத்து சில்க் ஸ்மிதாவை மிக அழகாக படமாக்கியவர் பிரதாப் போத்தன் மட்டும் தான்.
எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் மட்டுமின்றி தாராளமனம் படைத்தவர் பிரதாப். அவருக்கு கேரளாவில் ஏராளமான சொத்துக்கள் இருந்தன.இந்த சொத்துக்கள் மீது பல ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தீர்ப்பு பிரதாப்பின் அண்ணன் ஹரி போத்தனுக்கு சாதகமாக வந்தது. ஆனால், அவர் உயிரோடு இல்லாததால், அனைத்து சொத்துக்களும் பிரதாப்பிற்கு கிடைத்தது. அதில் தனக்கு சிறிது சொத்துக்களை வைத்துக் கொண்டு மற்ற அனைத்து சொத்துக்களையும் தனது உறவினர்களை அழைத்து வழங்கியவர் பிரதாப். அதில் வழக்கு போட்டவர்களும் உண்டு.
பிரதாப்பை எனக்கு மிகவும் பிடித்ததற்கான ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 2006ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி இளையராஜா 1000 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதில் இளையராஜாவிற்கு உரிய அங்கீகாரத்தை அந்நிகழ்ச்சி வழங்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதாப், இதை தைரியமாக பொதுவெளியில் விமர்சனம் செய்தார். ஏனெனில், இளையராஜாவின் மகத்தான சாதனைகள் பிரதாப்பிற்கு நன்றாகவே தெரியும்.அதனால் தான் அவர் இந்த விமர்சனத்தை முன் வைக்க முடிந்தது.
பிரதாப் என்றவுடன் முட்டைக்கண்ணும் லென்ஸ் கண்ணாடியும், கைகளால் முகவாய் கட்டையை குத்தும் கேணக்கிறுக்கனா உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரோ என்ற உங்கள் சிந்தனையில் சித்திரங்கள் இருந்தால் அவற்றை துடைத்தெறியுங்கள்.
ஏனெனில் நாடக உலகில் இருந்து திரைக்கு வந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இளைய இயக்குநர்களை வளர்த்தல் என்ற பல்வேறு பன்முகப்பட்ட தன்மை உள்ள கலைஞர் அவர்.
அவர் நடித்த படங்களில் இருந்து பிடித்த மூன்று பாடல்களைப் பற்றி பதிவு செய்யவே இந்த பதிவு. அவர் தமிழில் அறிமுகமான அழியாத கோலங்கள் படம் 1979ம் ஆண்டு வெளிவந்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு இசை சலீல் சௌத்ரி. வங்களா மொழியை பின்னணியாக கொண்ட இந்த மாபெரும் இசைக்கலைஞன் இசையமைத்த ஒரு சில தமிழ் படங்களில் காலத்தால் அழியாக காவியம் அழியாத கோலங்கள்.
பிரதாப், ஷோபா நடித்த இந்த பாடல் காட்சிக்கு சலீல் சௌத்ரி மீட்டிய இசையில் பி.சுசீலா, ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய பாடல் எனக்கு பிரதாப்பை இன்னும் மனசுக்குள் நெருக்கமாக வைத்திருக்கிறது.
இந்தப் பாடலில் வரும் ஹம்மிங் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்கும். அந்த ஹம்மிங்கை தொடர்ந்து விரட்டி வரும் புல்லாங்குழல் இசையின் பேரழகும் மனத்தை கொள்ளை கொள்ளும்.
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்.. பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
எத்தனை முறை கேட்டாலும் மிக நம்பிக்கையை தரும் பாடல் இது. இயற்கையின் வனப்பை காட்சிப்படுத்திய விதமும், இப்பாடலின் இசையும் பாடலின் வரிகளும் நினைவை விட்டு நீங்கவே இல்லை. பாடலின் கடைசியாக வரும் சடசடவென வரும் சத்தங்கள்
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்.. அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்
இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம் இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்
இப்படியான வரிகள் மனதிற்குள் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது. அப்படியான புதிய அனுபவத்தை பூ வண்ணம் பாடல் கேட்கும் போதெல்லாம் தருகிறது.
பிரதாப் என்றவுடன் கிட்டாரும், ஷோபாவுடன் காட்சி தரும் "என் இனிய பொன் நிலாவே" மறக்கக் கூடிய பாடலா? 1980ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூடுபனி. இன்றளவும் மேடைக்கலைஞர்களின் புகழ்பெற்ற பாடலாக இந்தப் பாடல் அமைவதற்கு காரணம் இசைஞானியின் இசைக்கோர்ப்பு தான். இந்தப் பாடலின் வரிகளை கேஜே.யேசுதாஸ் பாடும் ஸ்டைல் தனிரகம். "அன்பே... பே" என அவர் உச்சரிக்கும் போது இசை நதியில் விழுந்து விடுவோம். பாடலில் இடையில்
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
என்ற சொல்லோவியம் காலத்தால் அழியாத பாடலில் நடித்த பிரதாப்பின் முகத்தை நம் கண் முன் நிறுத்தி விடுகிறது.
பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என்னாசை உன்னோரமே
வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே....
என முடியும் இடமும், அதனைத் தொடரும் இசையும் 1980ம் ஆண்டுகளில் யாரையாவது பாடுங்கள் என்றால் சட்டென இந்தப் பாடலைத் தான் பாடுவார்கள். அந்த அளவு மயக்கம் தந்த பாடல் இது.
பிரதாப்பை நினைவூட்ட மூன்றாவது ஒரு பாடல். 1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள். சந்தானபாரதியும், பி.வாசுவும் இணைந்து முதல் முதலாக பாரதி - வாசு என்ற பெயரில் இயக்கிய படம். பிரதாப் போத்தன், சுரேஷ், சாந்திகிருஷ்ணா மற்றும் பலர் நடித்த படம். பள்ளிப்பருவ காதலை கேள்விக்குள்ளாக்கிய நல்ல படம்.
ஆனால், இதே காலத்தில் பள்ளிப்பருவ காதலை சொன்ன பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை வெற்றியடைந்தது. ஆனால், நல்ல படமான பன்னீர் புஷ்பங்கள் ஓடவில்லை. ஆனால், இன்றளவும் சினிமா விமர்சகர்கள் பாராட்டக்கூடியதாக அப்படம் உள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
இப்படம் முழுவதும் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் படக்காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் இசைஞானி மீட்டிய இசை புதிய அனுபவத்தைக் கொடுத்தது. இப்படத்தில் பிரதாப்பிற்கு மலேசியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடல் அடிக்கடி நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்.
மலேசியாதேவன் என்ற மகத்தான கலைஞன் ஆர்ப்பாட்டமில்லாமல் பாடிய பாடல் இது. அவரின் இளமைக்கால குரலில் இருந்து ஒருவித நடுக்கம் நம்மை பிடித்துக் கொள்ளும்.
கோடைகாலக் காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடு அதைக் கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும் இவைகள் இளமாலைப் பூக்களே புது சோலைப் பூக்களே
என அவர் பாட, பின்னணியில் ஒலிக்கும் ஹம்மிங்கும் மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது. பிரதாப் என்ற நடிகனை நினைவில் கொள்ள எத்தனையோ... ஆனால், எனக்கு இந்த மூன்று பாடல்கள் எனக்கு போதுமானதாக இருக்கிறது.
பூவண்ணம் போல நெஞ்சம், என் இனிய பொன் நிலாவே, கோடை கால காற்றே என்ற இந்த மூன்று பாடல்களையும் எழுதியவர் யார் தெரியுமா? கங்கை அமரன் தான்.
May be an image of 1 person and sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...