''தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் செய்தது தேவையில்லாத சர்ச்சை. எந்த கட்சியினராக இருந்தாலும், வேட்புமனு தாக்கல், பதவியேற்பு போன்றவற்றை, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே செய்கின்றனர். ஏனென்றால் அதுதான் நம் பழக்கம்,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்த பின், அவர் அளித்த பேட்டி:அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஆசிரியர்கள் அல்லாத உளவியல் ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும்.அமலாக்கத் துறை விசாரணையில், நான் தான் நிபுணன். எனக்கு 20 முறைக்கு மேல் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். அடுத்த முறை அமலாக்கத் துறை விசாரணை நடந்தால், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளேன்.
வெளியில் இருந்து பார்க்க, அது பெரிதாக தெரியும். முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக, மன உளைச்சல் கொடுத்து, நேரத்தை வீணடிக்க செய்வதற்கு தான், அமலாக்கத் துறை விசாரணை நடக்கிறது. பா.ஜ.,வினர்ஒற்றை கட்சி அரசை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதைத் தடுக்க, தமிழகம் போல் அனைத்து மாநிலங்களும் தெளிவு பெற வேண்டும்.
தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் செய்தது தேவை இல்லாத சர்ச்சை. ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால் கூட, எலுமிச்சை பழத்தை வைத்து விட்டுதான் வண்டி எடுப்பார். அவரவர் நம்பிக்கையின்படி செய்கின்றனர்.எந்த கட்சியாக இருந்தாலும் வேட்புமனு தாக்கல், பதவி ஏற்பு, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே செய்கின்றனர். இதுதான் யதார்த்தம். கரிநாளில், ராகு காலத்தில் யாரும் பதவி ஏற்றதில்லை; ஏனென்றால், அது நம் பழக்கம்.
எனக்கு பொருளாதாரத்தில் 'ஆடம் ஸ்மித் மாடல்' உட்பட சில மாடல்கள் தெரியும். திராவிட மாடல் என்பது, பொருளாதார மாடலா, சமூக மாடலா என தெரியவில்லை. சமூக மாடல் என்பதை ஏற்கிறேன். அது பொருளாதார மாடலா என்பதை, அறிஞர்கள் தான் விளக்க வேண்டும்.
அரசியலில் ஏற்றத்தாழ்வு இருக்கத் தான் செய்யும். காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டாலும், கட்சியின் சித்தாந்தம் கெடவில்லை. இந்தியாவில் இன்றும் 20 சதவீத ஓட்டு, காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தினால், வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment