Friday, July 15, 2022

வரி உயர்வைதிரும்ப பெறுங்க!

 சென்னை மாநகராட்சியில் இருந்து சமீபத்தில் வந்த சொத்து வரி ரசீது கண்டு, மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்; 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, சொத்து வரியை எதிர்த்து போராட்டம் செய்தவர் தான், தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.

மேலும், 'பொதுமக்கள் மீது, இத்தகைய பொருளாதார நெருக்கடியை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் அப்போது கூறினார். ஆனால், அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பரில், எந்தவிதமான முன் அறிவிப்புமின்றி, 40 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மீண்டும் இப்போது, 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், சிறிது சிறிதாக சிரமப்பட்டு வீட்டை கட்டி, வாடகைக்கு விட்டு அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் தான் வாழ்ந்து வருகிறோம். மேலும், கொரோனாவிற்கு பிறகு, பள்ளிகள் முழுதுமாக திறக்காத நிலையில், வாடகைக்கும் யாரும் வரவில்லை. எனவே, ஸ்டாலின் அரசு தயவு செய்து, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...