Friday, July 1, 2022

யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கூட்டம் : தி.மு.க., கூட்டணி தலைவர்கள் அதிருப்தி.

 ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னையில் ஆதரவு கேட்ட கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அழைக்காததால், சில தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, நேற்று முன்தினம் சென்னை வந்தார்.



விதி விலக்கு



அறிவாலயத்தில் தி.மு.க., ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். அக்கூட்டத்திற்கு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில தலைவர்களை அழைக்கவில்லை.



அக்கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை மட்டும் அழைத்திருந்தனர். விதிவிலக்காக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மட்டும் பங்கேற்றார்.
அதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றவர்கள், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த யஷ்வந்த் சின்ஹாவை சந்தித்து ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தனர்.


முக்கியத்துவம்



இது குறித்து, காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்தபோது, காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிட்டபோது, தமிழகத்தில் தன் கூட்டணி தலைவர்களை அழைத்து ஆதரவு கேட்க வைத்தார். தற்போது, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை விட, சட்டசபை கட்சி தலைவர்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது  இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...