*பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.*
*கொண்டுவரப்பட்ட காரணம், கொடுத்த அவகாசம்,* *கையாளப்பட்ட முறைகள் யாவற்றையும் ஐந்தில் நான்கு நீதிபதிகள் அங்கீகரித்திருக்கிறார்கள்*.
*இதில் ஆச்சரியமில்லை.*
*1. புரியாதவர்கள்*
*2. பணத்தைப் பதுக்கி மறைத்து வைத்தவர்கள்.*
*அதான் 90% நோட்டுக்கள் திரும்ப வந்துடுச்சே*, *அப்படீன்னா கருப்புப் பணம் இல்லைன்னுதானே அர்த்தம்? என்று சில அறிவுச் சுடர்கள் கேட்டார்கள்.*
*மறைத்த பணத்தை வரி கட்டினால் நோட்டுக்கள் மாற்றித் தரப்படும் என்று அறிவித்ததில், வரி கட்டித்தான் மாற்றிக் கொண்டார்கள்* *என்பதையும் அதனால் அந்த ஆண்டின் வருமான வரி கலக்ஷனே இருமடங்கு ஆனது என்பதும் பலருக்கும் தெரியவில்லை.* *கருப்புப் பணத்தால் அரசாங்கத்துக்கு வரிதான் நஷ்டம்; அது வந்தாகி விட்டது. இது கோர்ட்டுக்குப் புரிந்திருக்கிறது.*
*புரியாதது போல் சிலர் நடிப்பதன் காரணம் ‘சிதம்பர ரகசியம்’. அதாவது திருடிச் சேர்த்த பணத்தை எந்த சோர்ஸில் வந்தது என்று டிக்ளேர் செய்ய முடியவில்லை*. *அப்படிச் சிலர் டிக்ளேர் செய்ததால் வந்த நன்மை*,
*அடுத்த ஆண்டிலிருந்து அந்த சோர்ஸைக் காட்டியாக வேண்டும்!*
*டீமானிட்டைஸெஷனுக்குப் பிறகு வரி வருமானம் 44% உயர்ந்திருக்கிறது*. *இதை விட என்ன பலன் கிடைத்துவிட முடியும்?*
*அடுத்த முக்கியமான விஷயம்; நம்முடைய பழைய நோட்டு அடிக்கும் மெஷின் பாகிஸ்தானுக்கு எப்படியோ கிடைத்திருக்கிறது.* *(இங்கே அதிகாரத்தில்* *இருந்தவர்கள்தான்* *ஏலத்தில் விற்றதாக ஒரு தகவல் உண்டு* *சரியா தவறா என்று சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கே வெளிச்சம்!*). *அவர்கள் சரமாரியாகக் கள்ள நோட்டு அடித்து இங்கே புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள்.*
*முக்கியமாய் காஷ்மீரில் கள்ள நோட்டு கல்லெறிகிறவர்களுக்கு தாராளமாக விநியோகம் ஆகியிருக்கிறது*. *இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் இலங்கைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலை நமக்கு ஆகியிருக்கும்.* *அதாவது உற்பத்தியைப் போல் பன்மடங்கு பணமாகி பணத்துக்கு சுத்தமாக மரியாதை இல்லாமல் போயிருக்கும்*. *ஒரு வாழைப்பழம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு ஆளாகி இருப்போம்*.
*தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரமும் தெரியாது,* *கள்ள நோட்டுக்கும், கருப்புப் பணத்துக்கும் வேறுபாடும் தெரியாது.* *அந்த மாதிரி ஆட்கள் டீமானிட்டைஸெஷன் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள்!*
*இந்த நுணுக்கமான உண்மைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்துக்குப் பாராட்டுக்கள், நன்றி.*
No comments:
Post a Comment