வெள்ளி முதல் வியாழன் வரை ( 6.8.2021- 12.8.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சுக்கிரன், புதன், குரு அதிர்ஷ்ட பலன்கள் அளிப்பர். அம்மன் வழிபாடு நலம் அளிக்கும்
அசுவினி: பணப்பற்றாக்குறையால் ஏற்பட்ட சிரமம் நீங்கும். சக பணியாளர்களிடம் இருந்த எதிர்ப்பு அடங்கும். கவலை தீரும். விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாதீர்.
பரணி: தடை ஏற்பட்டு விலகும். நண்பர்களைச் சந்திப்பீர்கள். அவசரத்திலும் பதற்றமின்றி முடிவெடுப்பீர்கள் .உடல்நலத்தில் அக்கறை கூடும். திறமை வெளிப்படும்.
கார்த்திகை1ம் பாதம்: நிம்மதி மீளும். நல்ல நபரின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். சோம்பலை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்

புதன், சுக்கிரன், சந்திரன் சாதக நிலையில் உள்ளனர். துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: புதிய முயற்சி நிறைவேறும். கவலை தீரும். பொறுப்பும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். தொழிலில் பாக்கி வசூலாகும். மன நிறைவு காண்பீர்கள்.
ரோகிணி: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபச்செலவு கூடும். பணியிடத்தில் பிறருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
மிருகசீரிடம் 1,2: அடுத்தவர் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து வாங்கும் போதும். விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
மிதுனம்
ராகு, கேது, குருவால் நற்பலன் உண்டு. விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3,4: அலைச்சலுக்குப் பிறகு முக்கிய விஷயம் ஒன்று நிறைவேறும். அரசு வகையில் நல்ல தகவல் கிடைக்கும். சிலர் கண் பரிசோதனை செய்ய வேண்டி வரும்.
திருவாதிரை: சகோதர வகையில் சந்திப்பு நிகழும். பணியிடத்தில் பொறுமை காக்கவும். நெருங்கிய ஒருவரின் முயற்சியால் நன்மை உண்டாகும்.
புனர்பூசம்1,2,3: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். நிதானம் அவசியம். வழக்கு விவகாரங்களில் முடிவு தள்ளிப் போக வாய்ப்புண்டு. ஆடை ஆபரணம் சேரும்.
கடகம்
புதன், சுக்கிரன், சந்திரன் நன்மை தருவர். ராமர் வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: நிதானமாகப் பேசுவது நல்லது. பெற்றோர் உடல்நிலை சீராகும். முக்கிய பணிகளில் மெத்தனம் காட்ட வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும் வாரம் இது.
பூசம்: கலையில் ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பயணங்கள் சற்றுத் தள்ளிப் போகக் கூடும். கணவருக்கு/ மனைவிக்கு நன்மை ஏற்படும். அழகுணர்வு அதிகரிக்கும்.
ஆயில்யம்: கவலைகளை துாக்கியெறியுங்கள். பணவிஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
குரு, புதன், சந்திரன் அனுகூலம் தருவர்.அனுமன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: எடுத்த விஷயம் சிறப்பாக முடிய விடாமுயற்சி தேவைப்படும். பயணங்கள் செல்லாவிட்டாலும் தொலைத் தொடர்பின் மூலம் நன்மை காண்பீர்கள்.
பூரம்: சிரமமின்றி பணிகளை எளிதாக நிறைவேற்றுவீ்ர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். மனதில் உற்சாகம் மேலோங்கும்.
உத்திரம்1: நிதிநிலை உயரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வந்து சேரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தெய்வீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி
சூரியன், சந்திரன், கேது அதிர்ஷ்ட பலன் தருவர்.மீனாட்சி வழிபாடு நலம் தரும்.
உத்திரம் 2,3,4: மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உறவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே இணக்கம் அதிகமாகும்.
அஸ்தம்: பொழுது போக்குகளில் ஈடுபட வேண்டாம். கடமைகளில் கவனம் செலுத்துவது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலையை தவிர்க்கவும்.
சித்திரை 1,2: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது அவசியம். சுபவிஷயத்தில் இருந்த தடைகள் மறையும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சி தரும்.
துலாம்
குரு, புதன், சுக்கிரன் அனுகூலம் அளிப்பர். விநாயகர் வழிபாடு நலம் தரும்.
சித்திரை 3,4: எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற அவசரத்தால் ஏமாற்றம் ஏற்படலாம். பணியாளர்கள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். திடீர் லாபம் கிடைக்கும்.
சுவாதி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். கவனம். பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: அடுத்தவர் கஷ்டம் தீர உதவுவீர்கள். உறவினர் மத்தியில் பாராட்டு பெறுவீர்கள். தொழில்நுட்பக் குழப்பத்தால் பணியில் தாமதம் ஏற்படலாம்.
விருச்சிகம்
சனி, சுக்கிரன், புதன் கூடுதல் நன்மை தருவர்முருகன் வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். வித்தியாசமாக செயல்படுவதாக நினைத்து தவறுகள் செய்ய வேண்டாம்.
அனுஷம்: சமூக அந்தஸ்து உயரும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பநலனில் அக்கறை தேவை.
கேட்டை: திட்டமிட்ட விஷயத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறையாமல் இருக்கும். உடல்நிலை சீராகும்.
சந்திராஷ்டமம்: 6.8.2021 காலை 6:00 மணி - இரவு 2:56 மணி
தனுசு
சந்திரன், ராகு, கேது நற்பலன் தருவர்.ராகவேந்திரர் வழிபாடு நலம் தரும்.
மூலம்: தடை தாமதம் உண்டாகலாம். பொறுமை இழக்க வேண்டாம். எந்த வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உறவினர், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பூராடம்: வாகன பயணத்தின் போதும், ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
உத்திராடம்1: முக்கிய விஷயங்களில் தாமதமாக வெற்றி கிடைக்கும். விடாமுயற்சி தேவை. பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சந்திராஷ்டமம்: 6.8.2021 இரவு 2:57 மணி - 9.8.2021 பகல் 11:12 மணி
மகரம்
குரு, புதன், கேது நற்பலன்கள் வழங்குவர்.சிவன் வழிபாடு வளம் தரும்.
உத்திராடம் 2,3,4: பெரியவர்களிடம் அலட்சியம் காட்டாதீர்கள். புதியவர்களிடம் பழகும் போது விழிப்பாக இருக்கவும். பணவரவு அதிகரிக்கும். மன அதிருப்தி உண்டாகலாம்.
திருவோணம்: செயலை முடிக்க தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் உதவி வந்து சேரும்.
அவிட்டம் 1,2: வாக்குறுதி அளிக்கும் முன் யோசிப்பது நல்லது. முறையான திட்டமிடல் அவசியம். உடல்நலனில் ஆர்வம் தேவை. அரசு வகையில் நன்மை உண்டு.
சந்திராஷ்டமம்: 9.8.2021 பகல் 11:13 மணி - 11.8.2021 மாலை4:49 மணி
கும்பம்
புதன், சுக்கிரன், குரு அபரிமித நன்மை செய்வர்.நடராஜர் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: அடுத்தவருக்கு உதவி செய்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு கூடும். மனதில் இருந்த வருத்தம் அனைத்தும் நீங்கும்.
சதயம்: தொழில், வியாபார வளர்ச்சி ஓரளவு திருப்தி தரும். பணியாளர்களுக்கு உரிய வருமானம் இல்லை என்ற குறைபாடு மறையும்.
பூரட்டாதி 1,2,3: முன்யோசனை உள்ளவர்களுக்குப் பிரச்னை வராது. மவுனமாக இருந்தால் இது அமைதியான வாரமே. வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
சந்திராஷ்டமம்: 11.8.2021 மாலை 4:50 மணி - 12.8.2021 நாள் முழுவதும்
மீனம்
ராகு, சூரியன், சனி அளப்பரிய நன்மை தருவர். குரு வழிபாடு குறை போக்கும்.
பூரட்டாதி 4: பணிவு. பொறுமை உள்ளவர்கள் வெற்றி காண்பர். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவு ஏற்படலாம்.
உத்திரட்டாதி : கற்பனை சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றி பெறும். நண்பர் மூலம் நல்ல செய்தி வரும்.
ரேவதி: பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். மனதில் உற்சாகம் மேலிடும். இளம் வயதினருக்கு நன்மையான வாரம். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் கிடைக்கும்.
No comments:
Post a Comment