தாலிபன்கள் காபூலை கைப்பற்றியதில் பல முகநூல் இஸ்லாமியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். உலகத்தையே இஸ்லாமிய மயமாக்குவதில் இது ஒரு வெற்றிப்படி என்ற கொண்டாட்டம் தெரிகிறது அவர்கள் விவாதத்தில்.
அமெரிக்க படைகள் தாலிபன்களுக்கு பயந்து ஓடி விட்டதான கற்பனையில்...அது கற்பனை என்று தெரிந்தே மிதக்கிறார்கள்..
இதை, ஏதோ அவர்களின் மதம், ஏதோ ஒரு நாடு, அவர்களின் மக்கள், அவர்களின் வெற்றி சந்தோஷம் என்று கடக்க முடியவில்லை. அங்கே வீழ்த்தப்பட்டிருப்பதும் ஒரு இஸ்லாமிய ஆட்சிதான் என்பதை ஏனோ தமிழக முகநூல் முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள்.
இதற்கு காங்கிரஸ் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கருத்து, எதிர்வினை என்னவென்று தெரியவில்லை. இந்திய, தமிழக இஸ்லாமியர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு எதிராக பேசத் துணிய மாட்டார்கள்.
இதில் நமக்கான செய்தி என்னவென்றால், நாளை தாலிபன்களின் அன்பு தாங்கமுடியாமல் ஆஃப்கானிய மக்கள் இந்தியாவில் தஞ்சம் கேட்டு வந்தால் அவர்களை உள்ளே விட்டு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று குரலெழுப்பப் போகிறவர்களும் இவர்களேதான். அனுமதி மறுத்தால் மனிதத்தன்மையற்ற காவி கொடூர அரசு என்று வர்ணிக்க தோதாய் இருக்கும்.
அகதிகள் போர்வையில் அதே தாலிபன்கள் ஆயுதங்களுடன் உட்புகுவார்களே என்ற கேள்விக்கு எவரிடமிருந்தும் பொறுப்பான பதில் வராது. ஏனெனில் இவர்கள் ஆசையே அப்படி ஒரு ஊடுருவல் நடக்க வேண்டும் என்பதுதான்.
அப்படியே அந்த மூவாயிரத்தி சொச்சம் தாலிபன்கள் டெல்லியைக் கைப்பற்றி, மோடியையும் அமீத்ஷாவையும் கழுவிலேற்றி.. என்று விரியக்கூடியது இவர்களின் கற்பனை
அடேய்... அதே தாலிபான்கள் சென்னையையும் கோட்டையையும் உங்கள் வீட்டையும் குழந்தை குட்டிகளையும் கைப்பற்ற எத்தனை நாள் ஆகும் என்று கேட்டால்.. என் இஸ்லாமிய சகோதரனை இரு கரம் விரித்து வரவேற்போம் .. என்பதே பதிலாக இருக்கும்..
வெள்ளையன் ஆட்சியில் அவனுக்கு அடிபணிந்து, கப்பம் கட்டி, குறுநில மன்னராய், ஜமீன்தாராய் , பாளையக்காரராய், நம் முன்னோர் வாழவில்லையா என்று கேட்பார்கள். என்னவொன்று, எங்கள் குடும்பமும் இஸ்லாத்தை தழுவ வேண்டும், "அவ்வளவுதானே,மாறிட்டா போச்சு.. எவ்வளவோ செஞ்சிட்டோம், இதைச் செய்ய மாட்டோமா ? அல்லாஹு அக்பர்.." முடிந்தது கதை.
மாறிட்ட, சரி, அப்புறம். உன் வீட்டுப் பெண்கள் நிலை ?.. கணுக்கால் தெரிந்தாலே கசையடி விழுமே ? பரவாயில்லையா ?..
"அதுவும் கடந்து போகும்.. எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டல்லவா ? எம் பெண்கள் சுதந்திரத்திற்காக அச்சோதரர்களுக்கு என்ன விலை தர வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா ? சிறு தீவு, நதிநீர், தொப்புள்கொடி உயிர் உட்பட எத்தனையோ விஷயங்களை வழக்குகளை நிறுத்த, வாரிசுகளின் பதவிக்காக விலையாய் தரவில்லையா நாங்கள் ?
அடேய்...அன்று விலைபேச உன் உடைமை, சொந்தம் உடல், உயிர் என்று எதுவுமே உனக்கு சொந்தமானதாய் இருக்காதே, பின் எதை விலை பேசுவாய் ?
அரை நூற்றாண்டாய் எல்லாவற்றுக்கும் வழிகாட்டிய எம் பகுத்தறிவும் அந்த இயற்கையும் இதற்கும் வழி காட்டும்....சரி அங்கு அமையும் புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்து நான் அறிக்கை தயாரிக்க வேண்டும்... கண்டதையும் சொல்லி பயமுறுத்தி பீதியைக் கிளப்பாதே.. நீ சங்கிதானே...அதிகப் பிரசங்கி..
வாசலில் போய் உறுப்பினர் அட்டை வாங்கிக்கோ, நீயும் பிழைக்க வாய்ப்பிருக்கு..
No comments:
Post a Comment