பிராமணர்கள் திமுகவைச்
சேர்ந்தவர்களுக்கு வழக்கறிஞர்களாக இருக்கலாம். டாக்டர்களாக இருக்கலாம். இந்து விரோதிகளுக்கு சிதம்பரத்தில் வெண்சாமரம் வீசலாம். கருணாநிக்கு திருப்பதியிலிருந்து நேரடியாக வந்து
நீடூழி வாழ்க என்று வேத மந்திரங்கள் முழங்கலாம்.
அவ்வளவு ஏன், மருமகளாக இருக்கலாம். மாமியாராக இருக்கலாம்.
அவர்களெல்லாம் பண வியாபாரிகளே.
பணத்துக்கு வீங்குபவர்களே. பணம்
கதியென வாழ்பவர்களே.
இந்து மத சம்பிரதாயங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் இவர்களுக்கும்
எந்த வித சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அனைவரும் அர்ச்சகராகலாம்
என்ற ஒரு கேணத்தனமான - பிராமண
எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக்
கொண்ட அறிவிப்பை செயல்படுத்த........
ஆலயங்களில் ஏற்கனவே இறைவனை
நம்பியே வேத மந்திரங்களை முழங்கிக் கொண்டிருந்த சிவாச்சாரியர்களை,
பட்டர்களை கழுத்தை நெறித்து
வெளியே அனுப்பிவிட்டு.....
அவர்களின் இடத்தில் புதிய
அர்ச்சகர்களை பணியேற்ற
நிர்பந்திப்பதாக வந்து கொண்டிருக்கும்
செய்திகள் நம்மை நிலைகுலையச் செய்கிறது.
நீதிக்கட்சி முதல் தி.க. தொடர்ந்து,
இன்று ஸ்டாலின் தலைமையிலான
திமுக, பிராமணர்களுக்கெதிரான
ஒரு யுத்தத்தை அரசு ரீதியாக நேரிடையாகவே துவக்கியிருப்பது
நன்றாகவே தெரிகிறது.
இது ஐம்பது ஆண்டுகளாக
திமுகவும் அதன் மூதாதையர்பளான
நீதிக்கட்சியும் திராவிட கழகமும்
இப்போதைய இந்து விரோத மாற்று
மத சக்திகளும் நடத்தி வரும் யுத்தம்.
நமக்கு தெரிகிறது.
நமக்கு உண்மைகள் புரிகிறது.
ஆனால் பிராமணர்களிலேயே
திமுகவை ஆதரிப்போர் இருக்கும்
வரையில் - திமுகவை ஆதரிக்கும்
சூடு சொரணையற்ற இந்துக்கள்
இருக்கும் வரையில்.......
நாம் ஒரு கேசத்தையும்
பிடுங்க முடியாது.
தமிழகத்துக்கு நல்லதைச் செய்ய
நினைத்து ஆர்வத்துடன் முன்வந்த
நல்லவர்களையும் வெற்று அரசியல் காரணங்களுக்காக த்வேஷித்து
அவமானப்படுத்தி துரத்தியதும்
நாம் அனைவரும்தானே.
I support affected Brahmins
Whoever they are.
That's all We Can do.
No comments:
Post a Comment