மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் முழு நேர கட்சி ஊழியராக வேலை பார்க்கும் போது, அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் மட்டுமே.
ஒருசமயம், அவர் வீட்டுக்கு அவரது நண்பர் ஒருவர் வந்தார். "ஐயா! எனக்கு அவசரமாக ஒரு 50 ரூபாய் கடன் வேண்டும்,'' என்று கேட்டார்.
அதற்கு சாஸ்திரி, "எனக்குக் கிடைப்பதோ மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். இதை வைத்து வீட்டை நிர்வாகம் செய்வதே சிரமம். இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு 50 ரூபாய் கடன் கொடுக்க முடியும்?'' என்றார்.
கடன் கேட்டவர் ரொம்பவும் வேண்டப்பட்டவர். அதிலும் அவசரம் என்று சொல்லுகிறார். இதனை ஒரு கணம் யோசித்த சாஸ்திரியின் மனைவி, "இருங்கையா' என்று கூறி உள்ளே போய் 50 ரூபாய் கொண்டு வந்து கடன் கேட்டவரிடம் நீட்டினார். அவரும் சந்தோஷத்தோடு, அதை வாங்கிக் கொண்டு போய் விட்டார்.
அவர் போனதும் சாஸ்திரி தன் மனைவியிடம், "உனக்கெப்படி 50 ரூபாய் கிடைத்தது?'' என்று கேட்டார்.
"நீங்கள் மாதாமாதம் கொடுக்கிற சம்பளப் பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, மாதம் 10 ரூபாய் வீதம் மீதம் பிடித்து வைத்திருந்தேன்,'' என்றார்
சாஸ்திரியின் மனைவி.
சிக்கனமாக குடும்பம் நடத்தும் தனது மனைவியின் பண்பைப் பாராட்டினார் சாஸ்திரி.
அதே நேரத்தில், மறுநாள் காலை காங்கிரஸ் அலுவலகம் சென்று பொருளாளரிடம், "என் மனைவி மாதம் 30 ரூபாய்க்குள்ளே குடும்பத்தை சிக்கனமாக, சீராக நடத்துகிறார். ஆகவே, அடுத்த மாதம் முதல் எனக்கு 30 ரூபாய் சம்பளமே போதும்!' என்று கூறினார்...

No comments:
Post a Comment