*மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.*
*எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.*
*காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான்,* *அடித்தான்*.
*அடிக்கும்போது* *எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்*
*ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!"* *என்று சொன்னது,*
*அவனை மிகவே*
*யோசிக்க வைத்தது.*
*அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்*.
*ஆனால், காந்தியை அவ்வப்போது*
*உற்றுப் பார்த்தான்*.
*இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.*
*ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"*என்று கனிவாக* *அழைத்து*
*நான் உங்களுக்கு ஏதாவது உதவ* *நினைக்கின்றேன்;*
*என்ன வேண்டும் என்றான்?*
*ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு* *நூல்களைப் பரிசாக* *கொடுத்தான்*
*இந்தத் தொடக்கம்* *நட்பாக மாறியது; வளர்ந்தது.*
*ஒரு நாள்* *காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.*
* *மகிழ்ச்சி எது?* *வருத்தம் எது?* *என்று கேட்டார்*
*காந்தி*.
*இன்று உங்களுக்கு*
*விடுதலை*. *இது மகிழ்ச்சியான செய்தி.*
*ஆனால், உங்களைப் பிரிய*
*என்னால் முடியவில்லை.*
*இது வருத்தமான* *செய்தி என்றான்*
*ஸ்மட்ஸ்.*
*காந்தி சொன்னார்*,
*"நானும் உங்களுக்கு*
*ஒரு பரிசு* *தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்"* *என்று சொல்லி*,
*தான் சிறையில்* *தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார்.*
*ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,*
*"இவ்வளவு*
*துல்லிமாகத்* *தைக்க,* *என் கால்களின்* *அளவு எப்படிக் கிடைத்தது*"
*என்று கேட்க*,
*சிரித்தபடி காந்தி*
*தனது மார்புத்* *துண்டை அகற்றினார்;*
*ஆரம்பத்தில்*
*ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது* *ஏற்பட்ட வடுக்கள்* *அங்கு இருந்தன*.
*"இந்த வடுக்களை*
*அளந்துதான்* *தைத்தேன்" என்று காந்தி சொன்னார்*.
*"தடால்" என்று சத்தம்;*
*ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின்* *கால்களைப் பிடித்துக்*
*கதறினான்.*
*"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!*
*என்னை மன்னித்து விடுங்கள்.*
*இனி யாரையும்*
*அடிக்க மாட்டேன்"* *என்றார்*.
*ஒரு நிமிடத்தில்,*
*ஒரு கொடிய மிருகம்,*
*மென்மையான*மனிதனாக* *மாறியது.*
*"கல்லையும் கனியாக* *மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.*
*ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.*
*"இந்த பூட்ஸ்தான்*
*இனி எனக்குக்* *கடவுள்;*
*இதை அணிய மாட்டேன், வணங்க மட்டுமே செய்வேன்"*
*என்று சொல்லி* *அந்த பூட்சை தன்* *பூஜை அறையில்* *வைத்து அப்படியே*
*வணங்கினான்.*
*"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும்.*
*மாற்றவும் முடியும்".*
*மன்னிக்கின்ற மனம், மனிதம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.*
*அன்பே சிவம்!*
*கருணையே ஏசு!*
*நற்பண்பே நபிகள்!*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
No comments:
Post a Comment