ஒவ்வொரு சராசரி மனுசனுக்கும் இந்த நினைப்பு கண்டிப்பா இருக்கும் நாம இல்லாட்டா எதுவுமே தன் குடும்பத்துல நடக்காது அப்படினு. எல்லாமே தன்னால தான் நடக்குது தான் தான் குடும்பத்துக்கு முக்கியம்னு ஒவ்வொரு குடும்ப தலைவனும், தலைவியும், மகனும் ,மகளும் நினைப்பாங்க
ஆனா அப்படி எதுவுமே இல்லை யார் இல்லாட்டாலும் நடக்க வேண்டியது நடந்துட்டு தான் இருக்கும் அப்படிங்கிறது பெரும்பாலோருக்கு தெரிஞ்சாலும்... தெரிய கூடிய வாய்ப்பு இருந்து இருக்கும் முன்பு இழப்பை சந்தித்தவர்களுக்கும் அப்படி இழந்தவர்களை பார்த்தவர்களும். ஆனா மனசு அதை ஏற்றுக்காது ஒரு போலி முகமூடியை சந்தோசமா வேண்டி விரும்பி போட்டுக்கிட்டு கெத்தா சுத்துவோம்.
அப்படி ஒரு மனுசனோட கதை தான் வினோதய சித்தம் படத்தோட கதை. நான் எதையுமே இங்க சொல்ல விரும்பலை படத்தோட ஒவ்வொரு காட்சியையும் எல்லோரும் அதே திரில்லோட பார்க்கனும் அப்படிங்கிறது தான் என்னுடைய ஆசை. ஒன்னு மட்டும் சொல்லுவேன் சினிமா அப்படிங்கிற தளத்துல வரும் கதைகளில் லாஜிக்கை தேடாதீங்க இப்படி எல்லாம் நடக்குமா அப்படிங்கிறது இல்ல விசயம் இப்படி நடந்தா எப்படி இருக்கும் அப்படிங்கிறது தான் கதை.
தான் என்னும் ஆணவத்தை அடியோட சோப்பு போட்டு கழுவி விட்டு இருக்கார் சமுத்திரகனி, தன்னுடைய இயக்கத்துல வந்த படத்துல தம்பி ராமைய்யாவோட பேரை டைட்டில் ல மட்டும் இல்ல படம் முழுக்க முன்னால நிறுத்தி டைரக்சன்ல ஸ்கோர் அடிச்சு இருக்கார். ரொம்ப பாசிட்டிவ் எண்ணங்களை ,நல்ல கருத்தை முன்நிறுத்தி படம் எடுத்து இருக்கார். படத்தில் அதிகம் பரிச்சையம் இல்லாம நடிகர்கள் நடித்து இருந்தாலும்
அருமையாக
நடிக்க வச்சு இருக்கார்னு சொல்லனும்... நெகிழ்ந்து கண் கலங்க வைத்து விட்டர்கள்.Ott ல வெளியிட்டாலும் வசூலை அள்ளி குவிக்காவிட்டாலும் ஒரு நல்ல அலைவரிசையை மக்கள் மனசுல பதிக்கும் இந்த படம்...

No comments:
Post a Comment