சரஸ்வதி பூஜை முறை
சரஸ்வதி தேவி நின்ற கோலத்தில் திருவானைக்கா கோயிலில் காட்சி தந்து அருள் பாலிக்கும் காட்சியும்
சரஸ்வதி 108 போற்றியம் இன்று பதிவு செய்து வணங்குகின்றோம்
ஓம் அறிவுருவே_போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே _போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே _போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே _போற்றி
ஓம் அகில லோக குருவே _போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய்_போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய்_போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே_போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே_போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையேபோற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே_போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்_போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி_
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே_போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே_போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே_ போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்_உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
பூஜையறையை சுத்தப்படுத்தி சரஸ்வதி படத்தை வெள்ளை தாமரை அல்லது வெள்ளை நிற பூக்களால் அலங்கரியுங்கள். சரஸ்வதியின் அருகில் பசு சாணம் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றுங்கள். ஒருபுறம் குழந்தைகளின் பாடப்புத்தகங்களையும், மறுபுறம் சுண்டல், பொங்கல், அவல், பொரி, கடலை, சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களையும் வையுங்கள். சரஸ்வதி போற்றி, அந்தாதி, சகலகலாவல்லி மாலை பாடல்களைப் பாடிய பின் தீபாராதனை காட்டி வழிபடுங்க
நாவில் குடியிருப்பவள்
* சப்தமாதர் என்னும் ஏழு பெண் தெய்வங்களில் சரஸ்வதியை 'பிராம்மி' என அழைப்பர்.
* மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து சரஸ்வதிகளை பவுத்தர்கள் வழிபடுகின்றனர்.
* நம் நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதிக்கு 'நாமகள்' எனப் பெயர்.
* எல்லா உயிர்களின் நாக்கிலும் சரஸ்வதி குடியிருப்பதாக கந்தபுராணம் கூறுகிறது.
* மணிமேகலை காப்பியத்தில் 'சிந்தாதேவி' என சரஸ்வதி குறிப்பிடப்படுகிறாள்.
சிந்திக்க வைக்கும் சிற்பம்
மகாராஷ்டிரா நாசிக் அருகில் திரியம்பக் என்னும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் அன்னத்தின் மீதமர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. அன்னம் வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவையே அணிந்திருக்கிறாள். வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக கல்வியாளர்கள் பண்புடன் வாழ வேண்டும் என்னும் சிந்தனையை ஏற்படுத்துகிறது. நான்கு கைகளில் வீணை, ஜபமாலை, சுவடிகள் உள்ளன. அருகில் இரு சேவகர்கள் வெண்சாமரம் வீசியபடி நிற்கின்றனர்.
மாலையிட்ட மங்கை
சுயம்வரத்தில் பங்கேற்கும் நிடதநாட்டு மன்னர் நளனுக்கு மாலையிட விரும்பினாள் தமயந்தி. ஆனால் அழகியான அவளை அடைய விரும்பிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி சுயம்வரத்தில் பங்கேற்றனர். எங்கும் நளனாக இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான நளனை அறிய முடியாமல் அவள் தவித்த போது சரஸ்வதி 'வானுலகில் வாழும் தேவர்களின் கால்கள் தரையில் படாது' என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். மனிதனான நளனின் கால்கள் மட்டும் தரையில் படுவதைக் கண்டு சரியான நபருக்கு மாலையிட்டு மகிழ்ந்தாள் தமயந்தி.
அன்னமும் மயிலும்
அன்ன வாகனத்தில் சரஸ்வதி இருப்பதாக வேதங்கள் போற்றுகின்றன. அன்ன வாகன சரஸ்வதியை 'அம்சவல்லி' என்பர். வெள்ளை நிற அன்னம் போல மனிதன் வெள்ளை மனதுடன் இருக்க வேண்டும். சரஸ்வதியின் வெள்ளை நிறப் புடவையும், வெள்ளை தாமரையும் இதையே வலியுறுத்துகின்றன. தென்னகத்தில் மயில் வாகனம் கொண்டவளாக சரஸ்வதி இருக்கிறாள். ரவிவர்மா ஓவியங்களில் மயில் இடம் பெற்றிருக்கும். தோகையை விரிப்பதும், மடக்குவதுமாக இருக்கும் மயில் போல அறிவில் விரிந்தும், பண்பில் அடங்கியும் நாம் வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம்.
புதுடில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பத்தாம் நுாற்றாண்டை சேர்ந்த சரஸ்வதி சிலை உள்ளது. மலர்ந்த தாமரையில் அமர்ந்துள்ள இவளின் கைகளில் அட்ச மாலை, சுவடிகள் உள்ளன. முத்து மாலை மேனியை அலங்கரிக்கிறது. கிரீடம் போன்ற அமைப்புடன் தலைமுடி உள்ளது. வடமாநிலங்களில் சரஸ்வதிக்கு அன்னப்பறவை வாகனமாக இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் செம்மறி ஆடு முன்கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் கம்பீரமாக உள்ளது. சரஸ்வதியின் திருவடியை வணங்கியபடி பக்தர் ஒருவரும் உடனிருக்கிறார்.

No comments:
Post a Comment