Monday, June 14, 2021

சீன தூதரகத்தின் மிரட்டல் பதில் உலகில் சலசலப்பை ஏற்படுத்துகின்றது.

 பிரிட்டனில் நடைபெறும் #ஜி7 நாடுகளின் கூட்டறிக்கை புதிய சவால் ஒன்றை உலகளாவில் எழுப்பியுள்ளது..!

அதாவது சீனாவினை அடக்கி தீருவது என்ற முடிவுடன் கூட்டபட்ட அந்த கூட்டம், உலகளவில் சீனா அமைத்துள்ள "One belt One Road" திட்டத்துத்தினை போல் இந்நாடுகள் தங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து அதே போல் ஒரு திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது
விஷயம் என்னவென்றால் சீனா வளைத்துள்ள நாடுகளை தவிர பல நாடுகள் உலகில் உண்டு அவற்றை தங்கள் கூட்டணியில் இணைத்து இதே போல் ஒரு சாலையினை அமைக்க திட்டமிடுகின்றன ஜி7 நாடுகள்
சீனாவின் "One belt One Road" சாலை எங்கெல்லாம் தன் மிரட்டலும் பணமும் பலிக்குமோ அங்கெல்லாம் செல்லும் இல்லை கடல் வழி முத்துமாலை எனப்படும் திட்டபடி செல்லும்
இதில் பங்குபெறாத இந்தியா, வியட்நாம் தென் கொரியா இன்னும் பல நாடுகள் உண்டு அந்த நாடுகளை இணைக்க முடிவு செய்துள்ளன ஜி7 நாடுகள்
இது சீனாவுக்கு வைக்கபடும் செக் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, சீனாவின் "One belt One Road" திட்டத்துக்கு இப்படி பதிலடி கொடுக்காவிட்டால் விரைவில் அது உலகின் நம்பர் 1 சக்தியாக எழும், கட்டுபடுத்தமுடியா பலனை பெறும் என்பது மேற்குலக கணக்கு
ஆக சீனாவுக்கு சவால் கொடுக்கபடும் நிலையில் லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் மிரட்டல் பதில் உலகில் சலசலப்பை ஏற்படுத்துகின்றது
"மிக சிறிய கூட்டம் (பிரிட்டனாக இருக்குமோ) பரந்த உலகை ஆளும் காலமெல்லாம் முடிந்துவிட்டது, இனி அந்த மாதிரி மிரட்டல் எல்லாம் எடுபடாது, சீனா எதையும் சந்திக்க தயார், சீனாவின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
உலகின் வறிய பின் தங்கிய நாடுகளை முன்னேற்றும் நோக்கில்தான் எம் திட்டம் உண்டு,இது யாருக்கும் போட்டி அல்ல" என பொங்கியுள்ளது
விஷயம் சொல்வது இதுதான்
இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் இருந்த பலமான நிலையினை சீனா பிடித்துவிட்டது, இப்பொழுது சீனாவுக்கும் மேற்குலகுக்குமான பனிபோர் தொடங்கிவிட்டது
இதில் இந்தியா மிக சாதுர்யமாக சீனாவிடம் இருந்தும் மேற்குலகிடம் இருந்தும் என்ன பெறவேண்டுமோ அதை பெற்று தன் பாதையில் விவேகமாக பயணிக்கின்றது, அது நல்ல விஷயம்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...