Sunday, June 13, 2021

குழந்தை உள்ளம் கொண்ட...👌.

 கேரளத்துக் கண்ணனூர்

அருகில் 'செருபழசி' எனும் சிற்றூர் !
நீ... பிறந்த பூர்வீகம் !!!
கடைக்குட்டிச் சிங்க மகன் !
ஊட்டியிலே வளர்ந்த மகன் !!
நாடகக் கலை ஆர்வம் கொண்டவனே !
கிளையின் முதல் இலையாய்...
கலைப் பயணத்தில் நள பாகப் பணி !!
ஆம் -
சமையல் உதவியாளர் பணி !!!
அமைந்த பணி... அதனின் கூடுதல்
ஆர்வமாய் நடிப்புடன்...
ஆர்மோனியம்... வாய்ப்பாட்டு _
கற்றல்... சுகமாய்ச் சென்றதோ ?
'நச்சுப்பொய்கை' நாடகத்தில்
அச்சுப்போல் பெண் வேடம்...
அதிலும் நீதீபதி யாய் முதல் வரம் !
'பக்த ராமதாஸ்' படத்திலே...
#மாதண்ணா வாக நகைச்சுவை !!
தொடர்கதை... தொடர...
அட ! வந்தது ராஜ குரு வேடம் -
'கவியின் கனவு' நாடகத்தில் _
சுவை மாறி... வில்லனாய் !!!
முதல் படத்திற்குப் பின்...
பொறுமை யாய் ஒன்பது
வருடங்கள்... ஓடிய பின் _
மீண்டும் நகைச்சுவை வேடம் -
நாராயண பாகவத ராய் !
இந்திய நாடு சுதந்திர மடைந்த
ஆண்டு... 'ராஜ குமாரி' யில்
மலர்ந்த நகைச்சுவை க்குப்
பரிசாய்... #பாஞ்ச் 5 படங்களில்
அரிய செயலாய்... கதாநாயகன்..!!
தங்கு தடையின்றிச் சென்ற பாதை _
தாங்கிய வீரிய நடை... அசை போட்டுத்
திரை உலகை... திருப்பிப் போட்டது -
'வேலைக்காரி' யும்...
'திகம்பர சாமியார்' படமும் !!!
சர்வாதிகாரி _ யில் - "மகா வர்மன்"
பெரும் திருப்பு முனை யாய்
#வில்லன் முத்திரை...!!!
அதில் வாள் சண்டை... தனி முத்திரை👍
முத்து மாலை போல் "வில்லன்" வேடம்
சுத்திச் சுத்தி பல்லாங்குழி யாய்...
பலப்பல... பள பளப்பான... நடிப்பாற்ற லாய் !!!
கதாபாத்திரத் திற்கு உயிரூட்ட -
சாதனை "ஒப்பனை"... உனக்கு நிகர் நீயே !!!
திகம்பர சாமியாரில் 11 வேடங்கள் !
அக மகிழ் வேடமாய்... 'கிழ ஜமீன்'..!! உன்
மனம் நெகிழ் 'நெஞ்சம் மறப்பதில்லை' !!!
🌷திரைப் படங்களில்... கிராமப்புறங்களில்
உன்னைப் பார்த்தவுடன் _ 'மாதர் குலம்'
ஆர்ப்பரித்து... வசை பாடுவது உன்...
நடிப்புக்குக் கிடைத்த உண்மையான விருது !!!
ஆறு முதல்வர்களுடன் நடித்த
பேரும் புகழும் உடையவனே !
செந்தமிழ் உச்சரிப்பு..! உன் மன மகிழ் உபசரிப்பு..!!
'அம்பிகாபதி' யிலே "ஒட்டக்கூத்தர்" !
'அரிச்சந்திரா' விலே "விசுவாமித்திரர்" !!
அரிதாரம்... உன் புகழாரம் !!!
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம்
மொழியுடன்... உன் கணக்கில் இந்திப்
படம் ஒன்றும்... ஆங்கிலப் படம் ஒன்றும் !!!
வாரியத்தின் 'தலைவர்' பதவி வேண்டுமா ? என
தானா... வந்ததை... " நான் நிம்மதியா இருக்கிறது
உங்களுக்கு ப் பிடிக்கலையா CM sir " என்று...
அன்பும் மரியாதையும் கலவை யாய் மறுத்தவனே !
சிறு வயது முதல் சைவப் பிரியனே !
இசை ஆர்வமும்... கிரிக்கெட் விளையாட்டும்...
புத்தகப் படிப்பும் உன் தனி விருப்பமாமே !
தனியாக 'நாடக மன்றம்' நடத்தியவனே !
கலைத்துறை யினரின்... நடைப்பயணம் சபரி
மலை 'யாத்திரை' க்கு அஸ்திவாரமே ! குருசாமி யே !!
காலை 4 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி !
ஆயில் மசாஜ் !! நீச்சல் குளியல் !!! டென்னிஸ்
விளையாட்டு... உன் வழக்கப்படி நடைமுறை யாமே 👍
ருக்மணியின் மணாளனே !
'மே' மாதத்தில் நல்லதொரு குடும்பமாய்...திரைத்
துறையை மறந்து ஊட்டியில் வாசம் செய்பவனே !
யார் வந்தாலும்... பட்டு வேட்டி... அங்கவஸ்திரம் -
பட்டுச்சேலை யில் "தம்பதி" சமேத ரராய்...
ஆசிர்வாதம் 🙏 உனக்கு வழக்க மாமே ?
திரை உலகம் தாண்டி திரைப்பட ஆவணப்
படங்கள்... தொலைக்காட்சித் தொடர் 'ஓவியம்' !
சண்டைக்காட்சிகளில் -
நடித்து நடித்து... உடல் வலிக்கிறது !
திரைப்பட படங்களில் -
பேசிப் பேசி... வாய் வலிக்கிறது !!
என மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னவனே 👌
நடிப்பில் சர்வாதிகாரத் திமிரைத்
துல்லியமாகக் காட்டியவனே...!
உடற்பயிற்சி யை உயிர் மூச்சாய்...
படப்பிடிப்பின் போதும் எங்கிருந்தாலும்...
வீட்டுச் சாப்பாட்டு ருசியாய்...
🌷படப்பிடிப்பில் ரசிகர்களை... தன் "ட்ரேட் மார்க்"
ஓடச் செய்து... குழந்தை உள்ளம் கொண்ட...
புன்னகை வெளிப்பாட்டாய்...
நிஜத்திலும் இப்படியா விரட் டுவது ? என்றவுடன் _
நம்பியாரைத் தானே பார்க்க வந்தார்கள் !
அப்படியே நம்பட்டும் !! என்பாயாமே !!!
இன்றும் பல "மிமிக்ரி" கலைஞர் களால்...
எடுத்தாளப்படும்... கம்பீரமான குரலோன்...
அவர் தான் எம். என். நம்பியார் 👍
M. N . N 👌

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...